Tuesday, 9 April 2013

மாதாவே சரணம் | Mathave Saranam

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி

மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே

நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே

7 comments:

  1. மாதாவே உலகின் தாய்.. மாதாவே சரணம்

    ReplyDelete
  2. Praise the lord,Amen,Hallelujah,Ave Maria...

    ReplyDelete
  3. Praise the lord for such a beautiful song

    ReplyDelete
  4. I could feel last stances are somewhat different

    ReplyDelete
  5. ❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  6. மரியே வாழ்க

    ReplyDelete