Thursday 21 September 2017

St Rajakanni Matha Church Annual Feast 2017 | புனித ராஜகன்னி மாதா ஆலய திருவிழா அழைப்பிதழ் 2017

தூத்துக்குடி மறை மாவட்டம் கடகுளம், புனித ராஜகன்னி மாதா ஆலய திருவிழா வரும் அக்டோபர் மாதம் 6 ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் இனிதே துவங்குகிறது.

நவ நாட்களில் தினமும் காலை 6.00 மணிக்கு திருப்பலியும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய  நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.

திருவிழா நிகழ்வுகள்:


1 ம் திருவிழா:

காலை 7.௦௦ மணிக்கு சாத்தான்குளம் மறை மாவட்ட முதன்மைக்குரு அருட்தந்தை. ரெமிஜியூஸ் அவர்கள் தலைமையில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருப்பலி நடைபெறும்.
மறையுரை ஆற்றுபவர் அணைக்கரை பங்குத்தந்தை அருட்தந்தை. ஜோசப் D. ஸ்டாலின் அவர்கள்.

மாலை 6 .15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடைபெறும். மறையுரை ஆற்றுபவர் செட்டிவிளை பங்குத்தந்தை அருட்தந்தை. பீட்டர் பவுல் அவர்கள்.

சிறப்பிப்போர்: நற்கருணை வீரர் சபை, பாலர் சபை மற்றும் ஞானம் அன்பியத்தார்.

இரவு அதிசயபுரம், ஞாயிறு மறைக்கல்வி மன்றத்தினர் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

2 ம் திருவிழா:

காலை 6.௦௦ மணிக்கு திருப்பலி நடைபெறும்.
மாலை 6 .15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடைபெறும். மறையுரை ஆற்றுபவர் தோமையார்புரம் பங்குத்தந்தை அருட்தந்தை. உபர்ட்டஸ் அவர்கள்.

சிறப்பிப்போர்: அமலோற்பவ மாதா சபையினர் மற்றும் தூய ஆவி அன்பியத்தார். 

இரவு பாடல் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும்.

3 ம் திருவிழா:

காலை 7.30 மணிக்கு திருப்பலி நடைபெறும், அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு முழுநேர நற்கருணை ஆராதனை நடைபெறும்.

மாலை 6 .15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடைபெறும். மறையுரை ஆற்றுபவர் ஜீவாநகர்  பங்குத்தந்தை அருட்தந்தை. சகேஷ் அவர்கள்.

சிறப்பிப்போர்: அதிசயபுரம் ஊர் பொது மக்கள். 

இரவு கடகுளம், ஞாயிறு மறைக்கல்வி மன்றத்தினர் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 

4 ம் திருவிழா:

காலை 6.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

மாலை 6 .15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடைபெறும். மறையுரை ஆற்றுபவர் சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை. ரோஜர் அவர்கள்.

சிறப்பிப்போர்: திருக்குடும்ப சபையினர், மரியாயின் சேனையினர் மற்றும் திருவிருந்து அன்பியத்தார்.

5 ம் திருவிழா:

காலை 6.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

மாலை 3.30 மணிக்கு புனித ஜோசப் நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
மாலை 6 .15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடைபெறும். மறையுரை ஆற்றுபவர் சிதம்பரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை. பபிஸ்டன் அவர்கள்.

சிறப்பிப்போர்: புனித அந்தோணியார் இளைஞர் சபையினர் மற்றும் சமாதானம் அன்பியத்தார். 

இரவு விவிலிய வினாடி வினா போட்டி நடைபெறும்.

6 ம் திருவிழா:

காலை 6.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

மாலை 6 .15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடைபெறும். மறையுரை ஆற்றுபவர் கூடன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை. பிரதீப் அவர்கள்.

சிறப்பிப்போர்: புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிறைவாழ்வு அன்பியத்தார். 

இரவு புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நடத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

7 ம் திருவிழா:

காலை 6.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

மாலை 6 .15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடைபெறும். மறையுரை ஆற்றுபவர் தட்டார்மடம் பங்குத்தந்தை அருட்தந்தை. ரத்தினராஜ் அவர்கள்.

சிறப்பிப்போர்: இயேசுவின் திருஇருதய சபையினர் மற்றும் அருள்பொழிவு அன்பியத்தார். 

இரவு அன்பியங்கள் மற்றும் பக்த சபையினர் நடத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

8 ம் திருவிழா:

காலை 6.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

மாலை 6 .15 மணிக்கு ஜெபமாலையைத் தொடர்ந்து நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறும். மறையுரை ஆற்றுபவர் அடைக்கலாபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை. ஜஸ்டின் அவர்கள்.

சிறப்பிப்போர்: கடகுளம், ஞாயிறு மறைக்கல்வி மன்றத்தினர் மற்றும் பேரின்பம் அன்பியத்தார்.

9 ம் திருவிழா:

காலை 6.00 மணிக்கு நவநாள் சிறப்புத் திருப்பலி நடைபெறும்.
மறையுரை ஆற்றுபவர் கடகுளம் மண்ணின் மைந்தர், பணகுடி பங்குத்தந்தை அருட்தந்தை நெல்சன் அவர்கள்.

மாலை 4.00 மணிக்கு புனித ராஜகன்னி அன்னையின் திருத்தேர்ப் பவனி நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 8.00 மணிக்கு மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனை நடைபெறும். நற்கருணை ஆராதனையை தலைமையேற்று நடத்துபவர் பொத்தகாலன்விளை பங்குத்தந்தை அருட்தந்தை. ஜோசப் ரவிபாலன் அவர்கள் மற்றும் மறையுரை ஆற்றுபவர் கூடுதாழை பங்குத்தந்தை அருட்தந்தை. ஜெகதீஷ் அவர்கள்.

சிறப்பிப்போர்: வெளியூர் வாழ் கடகுளம் மக்கள்.

10 ம் திருவிழா:

காலை 6.30 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். திருப்பலியில் உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கப்படும்.
திருப்பலியைத் தலைமையேற்று நடத்தி மறையுரை ஆற்றுபவர், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. இவான் அம்புரோஸ் அவர்கள்.
காலை 11.00 மணிக்கு திருமுழுக்கு அருட்சாதனம் வழங்கப்படும்.
காலை 11.30 மணிக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

மாலை 5.00 மணிக்கு அன்னையின் திருத்தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.

சிறப்பிப்போர்: கடகுளம் ஊர் பொது மக்கள்.

16/10/2017 திங்கள்க் கிழமையன்று  காலை 6.00 மணிக்கு நன்றித் திருப்பலி மற்றும் அதனைத்தொடர்ந்து  கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். நண்பகல் ஊர் நிர்வாகிகள் சார்பில் ஊர் பொது அசனம் நடைபெறுகின்றது.

17/10/2013 செவ்வாய்க் கிழமையன்று மாலை 7.00 மணிக்கு புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து கொழுந்தட்டு பங்குத்தந்தை அருட்தந்தை. ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் நன்றித் திருப்பலி மற்றும் அதனைத்தொடர்ந்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பில் ஊர் பொது அசனம் நடைபெறுகின்றது.


திருவிழா அழைப்பிதழ் 2017:





பக்தர்கள் அனைவரையும் புனித ராஜகன்னி அன்னையின் அருள் பெற்றுச் செல்ல உங்களை அன்போடு வரவேற்கும்,
பங்குத்தந்தை மற்றும் ஊர் பொது மக்கள் கடகுளம்.

Sunday 19 March 2017

தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை சுமந்தே இயேசு || Thozhil Siluvai Nenjil Kolkai Sumanthe Yeshu


தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை
சுமந்தே இயேசு போகின்றார்
துணிந்து தேவன் போகின்றார்

1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே
நீதியின் வாயில் மூடியதாலே
முள்முடி தரித்து உலகை நினைத்து
அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே.

2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை
அவனியில் வாழும் அனைவருக்காகவும்
தாமே அணைத்து தோளில் இணைத்து
கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே.

3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக
முடியா நிலையில் நிலை தடுமாறி
தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து
எழுந்து நடந்திட ஆற்றல் பெற்றாரே.

4 நான்காம் நிலையில் தளர்வுற்ற மகனை
தாய்மரி கண்டு தேற்றுகின்றாரே
உலகம் விடிந்திட தீமை அழிந்திட
வீரத்தாய் அவள் விடை கொடுத்தாளே.

5 ஐந்தாம் நிலையில் சுமைதனை பகிர்ந்திட
சிரேன் நகரத்து சீமோன் உதவிட
உதவும் பாடத்தை உயர்ந்த வேதத்தை
உலகிற்கு சீமோன் எடுத்துச் சொன்னாரே.

6 ஆறாம் நிலையில் ஆண்டவர் முகத்தை
துடைத்திட வெரோணிக்காள் துணிந்து விட்டாரே
பூமியில் பெண்கள் துணிச்சலின் தூண்கள்
என்பதை வெரோணிக்காள் உணர்த்தி விட்டாரே.

7 ஏழாம் நிலையில் இரண்டாம் முறையாய்
பூமியில் விழுந்தார் விடியலின் விதையாய்
மண்ணில் விழாமல் மறுபடி எழாமல்
கோதுமை மணியும் பயனளிக்காதே.

8 எட்டாம் நிலையில் எருசலேம் வீதியில்
ஆறுதல் அளித்தனர் கருணையின் மகளிர்
அழுவதை நிறுத்தி அநீதியை எதிர்த்து
குரல் கொடுப்பதுவே ஆறுதல் ஆகும்.

9 ஒன்பதாம் நிலையில் மூன்றாம் முறையாய்
முழு முதல் தலைவன் வீழ்ந்திடலானார்
பாரம் அழுத்த சோகம் வருத்த
லட்சிய தாகத்தால் துடித்தெழுந்தாரே.

10 பத்தாம் நிலையில் அவமான சிகரத்தில்
அணிந்துள்ள ஆடையை அகற்றியதாலே
யாவும் இழந்து தலையை கவிழ்ந்து
லட்சிய ஆடையை உடுத்தி நின்றாரே.

11 பதினொன்றாம் நிலையில் மாசற்ற இயேசுவை
சிலுவையில் அறைந்தனர் தீமையின் ஏவலர்
பாவம் ஒருபுறம் பழியோ மறுபுறம்
இதுதான் உலகின் நடைமுறை பாடம்.

12 பன்னிரெண்டாம் நிலையில் கள்வரின் நடுவில்
கொடூரமாய் இயேசு உயிர் துறந்தாரே
போராளி இறப்பில் போராட்டம் வலுப்பெறும்
இதுதான் விடியலின் வைகறை கோலம்.

13 பதிமூன்றாம் நிலையில் மரியாவின் மடியில்
மரித்த மகனுக்கு தாலாட்டுப் பாட்டு
தாயின் மடிதான் என்றென்றும் தஞ்சம்
தரணிக்கு முழுவதும் இதுதான் வேதம்.

14 பதினான்காம் நிலையில் கல்லறை தனிலே
இயேசுவின் உடலை அடக்கம் செய்தாரே
கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
தொடர்ந்திடும் பயணம் உன்கதை கூறும்.