Friday 24 May 2013

தூய ஆவி பாடல்கள் | Holy Spirit Songs in Tamil

1. ஆவியானவரே அன்பின் ஆவியானவரே | Aaviyanavarae Anbin Aaviyanavarae
 

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே - 2


உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே - 2
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே - 2

சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே - 2
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே - 2

ஆவியின் வரங்களினால் எம்மையும் நிப்பிடுமே - 2
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே - 2 


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2. தூய ஆவியே துணையாக வருவீர் | Thooya Aaviyae Thunaiyaga Varuveer 

தூய ஆவியே துணையாக வருவீர்
இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் - 2


மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர்
மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் - 2

மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர்
மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் - 2

தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர்
தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் - 2

பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர் 
பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் - 2

கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர்
இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் - 2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 


3. வானம் திறந்து வெண்புறா போல | Vaanam Thiranthu Venpura Pola

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்   (2)
 
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே   (2) 


மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும்  (2)  -யோர்தான்

வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே   (2)  -யோர்தான்

பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்   (2)  -யோர்தான்

அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே   (2) -யோர்தான்

கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்  (2)  -யோர்தான்


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

4. உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் | Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum

உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்
பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா  -2

உலர்ந்து போன எலும்புகளாய்
உலரப்பட்ட எங்களிலே  -2
உயிர் தரும் ஆவியைத் தந்து
வீரச்சேனையாய் மாற்றிடுமே  -2

வாக்களித்த வல்லமையை
பெந்தேகோஸ்தே நாளினிலே  -2
பொழிந்த இறைவா எங்களிலும் 
நிரம்பி வழியச் செய்தருளும  -2

அடிமை விலங்குகள் தகர்ந்திடவே
அக்கினி ஆவியை ஈந்திடுமே   -2
தடைகளும் களைகளும் எரிந்திடவே
மீட்பின் ஆவியை ஊற்றிடுமே   -2

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

5. வல்லமை தேவை தேவா | Vallamai Thaevai Thaeva

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா இப்போது தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை - 2
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - 2

இறுதி நாளில் எல்லோர் மேலும் ஆவியை பொழிவேன் என்றீர் - 2
மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே - 2

பெந்தேகோஸ்தே நாளின் போது பெரிதான முழக்கத்தோடு - 2
வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் - 2

 ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


6. ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே | Ootru Thannerae Enthan Theva Aaviyae

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கி வா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தாவே 
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 

கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்  
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே --ஊற்றுத் தண்ணீரே

ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே 
கனிதந்திட நான் செழித்தோங்கிட 
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட --ஊற்றுத் தண்ணீரே

இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபை தனிலே
எழும்பிட இந்த வேளை இறங்கிடுமே
ஆத்மா பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே --ஊற்றுத் தண்ணீரே
 ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

7. ஆவியான தேவனே அசைவாடுமே | Aaviyana Thevanae Asaivadumae

ஆவியான தேவனே அசைவாடுமே -2
அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே - 2
வாரும் ஆவியே தூய ஆவியே
வாரும் ஆவியே தூய ஆவியே - 2

தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம்
திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா - 2

ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என்
சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா - 2

தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என்
துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா - 2
 
 ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

8. எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே | Engalukkullae Vasam Seiyyum Aaviyanavarae


எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா   (2)
 
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே   (2)


எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே   (2)
வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே   (2)  -ஆவியானவரே

கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே  (2)
செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே  (2)  -ஆவியானவரே


 ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

9. ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே | O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae


ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் -இறைவா
ஆராதனை செய்கின்றேன் - 2

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 

9 comments:

  1. Thankyou so much. This is very helpful.

    ReplyDelete
  2. Mr. Stanley thank you for uploading all these songs

    ReplyDelete
  3. Thank u. very useful to us

    ReplyDelete
  4. I sang all these songs...thank you welcome holy spirit....we praise you lord...holy spirit we neeed you more than ever these times...fill us make us your fiery spirit....amen!

    ReplyDelete
  5. Welcome Holy Spirit.Fill us with your power , guide us in each and every moment.Amen

    ReplyDelete
  6. Can you anyone share these songs in English as I don't no to read Tamil

    ReplyDelete
  7. Oh! Holy Spirit guide us through to be united with you and experience with we can achieve everything that Jesus wants in lives and that sin can never never near us and we will be in the presence of the Almighty for ever and will always experience immaculate presence of our dear Mother Mary and under the protection our dear patron of St. Joseph the head of the earthly family and our hands and hearts be raised raised 24x7 all the time...for what Almighty God did to our dear Mother...and help us to be truthful for our vocation in this world...

    ReplyDelete