Sunday 16 June 2013

தவக்காலப் பாடல்கள் | Thavakkala Paadalgal

Contents:

1. தவக்காலப் பாடல்கள்
2. குருத்து ஞாயிறு பாடல்கள் 
3. புனித வியாழன் பாடல்கள்  
4. புனித வெள்ளி பாடல்கள்  
5. சிலுவைப்பாதை பாடல்கள் | Siluvai Pathai Padalgal 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் | Manithanae Nee Mannaga Irukkintai
 
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

என்னை நேசிக்கின்றாயா | Ennai Nesikkintraya


என்னை நேசிக்கின்றாயா - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் - 2
தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்

பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா

பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்

உம்மை நேசிக்கின்றேன் நான் - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கல்மனம் கரைய கண்களும் பனிக்க | Kal Manam Karaiya Kankalum Panikka
 

கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா (2)

என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா -2
பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க

பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2

நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு
பூவெனும் இதய பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி | Kalvari Pookalai Em Karangalil Yenthi
 

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் - 2
காணிக்கை உமக்களிக்க - 2
குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்
இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை
உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)
கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்
இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை
வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)
அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் - உள்ளம்
ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ | Nenjathilae Thooimaiyundo

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!
இயேசு வருகின்றார்.!
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்.!

வருந்தி சுமக்கும் பாரம் - உன்னை
கொடிய இருளில் சேர்க்கும் -2
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் -2

குருதி சிந்தும் நெஞ்சம் - உன்னை
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
செய்த பாவம் இனி போதும்
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

மாய லோக வாழ்வு - உன்னில்
கோடி இன்பம் காட்டும் - 2
என்னில் வாழும் அன்பர் இயேசு
உன்னில் வாழ இடம் வேண்டும் - 2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


Nan Paavi Yesuve | நான் பாவி இயேசுவே என்

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன் 
என்னைத் தேற்றும் இயேசுவே -2

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே -2

புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை கட்டும் இயேசுவே -2

சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே -2

நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே -2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


Yesuvin Anbai Maranthiduvayo| இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ


இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2
மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ -இயேசுவின்

அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2
கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு -இயேசுவின்

அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2
சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு -இயேசுவின்

எனக்காக மனுவுரு தரித்த நல் அன்பு
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு -2
எனக்காக உயிரையே தந்த தேவ அன்பு - இயேசுவின்

கரைக்கடங்கா அன்பு கசிதரும் அன்பு
கைதி போல் இயேசுவே சிறையிடும் அன்பு
விலையில்லாப் பலியாக விளங்கிடும் அன்பு -2
விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு  -இயேசுவின்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

Padugal Neer Patta Pothu | பாடுகள் நீர் பட்ட போது 

கெட்டுப் போனோம் பாவியானோம்
கிருபை செய் நாதனே
மட்டில்லாக் கருணை என்மேல்
வைத்திரங்கும் இயேசுவே

பாடுகள் நீர் பட்ட போது
பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடி பாவம் தீர்த்து மோட்சம்
கொள்ளுவிக்க வல்லதே -கெட்டுப் போனோம்

துஷ்ட யூதர் தூணினோடு
தூய கைகள் கட்டியே
கஷ்டமாய் அடித்தபோது
காய்ந்த செந்நீர் எந்துணை -கெட்டுப் போனோம்

சென்னிமேல் கொடிய யூதர்
சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத்தால்
சர்வ பாவம் நீங்குமே -கெட்டுப் போனோம்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


Manitha O Manitha | மனிதா ஓ மனிதா

மனிதா ஓ மனிதா
நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே  திரும்புவாய் -2
நினைவில் வை நினைவில் வை
நினைவில் வை  ஓ மனிதா

இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்
இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம்
இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம்
இருள்தனைக் களைவோம்  அருள்தனை அணிவோம்

கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்
கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும்
சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும்
சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


Thayai Seivai Naatha | தயை செய்வாய் நாதா

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா
பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் -தயை செய்வாய்

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் -தயை செய்வாய்

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன் -தயை செய்வாய்


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

Siluvaiyil Nintru Paainthodum Rattham | சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம்

சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா  --(2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா  - சிலுவையில்

கோரமாம் சிலுவையை சுமந்து சென்று
குருதியும் வடியுதே சிரசினின்று --(2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் --(2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார்  --(2)   -சிலுவையில்

சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் --(2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா --(2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா --(2)  -சிலுவையில்


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

Engu Pogireer Yesu Thaivame | எங்குபோகிறீர் இயேசு தெய்வமே

எங்குபோகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் --எங்கு போகிறீர்

தீய சிந்தனை நான் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி நான் சுமத்தினேன்
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உன் விலாவில் குத்தினேனே
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரி துப்பியது என் பகைமை உணர்ச்சியால்
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்

அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால்  --எங்கு போகிறீர்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எபிரேயர்களின் சிறுவர் குழாம் | Ebiraeyargalin Siruvar Kulam

எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர் கொண்டனரே

மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன
பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்
அவர் தம் உடைமையே
ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை
நிலை நிறுத்தியவர் அவரே
ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே

ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?
மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில்
மனத்தைச் செலுத்தாதவன்
தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்

இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்
இவனே தன்னைக் காக்கும்
ஆண்டவரின் மீட்பு அடைவான்
இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே
யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே

வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்
பழங்காலக் கதவுகளே உயர்ந்து நில்லுங்கள்
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்
போரில் வல்லவரான ஆண்டவரே இவர்  

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

 
அன்பும் நட்பும் எங்குள்ளதோ | Anbum Natpum Engullatho

அன்பும் நட்பும் எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்

கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்
ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் - யாம்
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே

ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்
அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத் துடனேயாம்
ஒருவரை ஒருவர் நேசிப்போம்

எனவே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே

தீய சச்சரவுகள் ஒழிந்திடுக
பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்
கிறிஸ்து நாதர் இருந்திடுக

முக்தி அடைந்தோர் கூட்டத்தில்
நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்
மகிமை வதனம் காண்போமே

முடிவில்லாமல் என்றென்றும்
நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய
பேரானந்தம் இதுவேயாம்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர் | En Iraiva En Iraiva Ennai Yen Kai Negizhntheer

என் இறைவா என் இறைவா
ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)

என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை
ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன
பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்

என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே
என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்கு துணையான நீர் எனக்கு
உதவி புரிய விரைந்து வாரும் 
 
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் | Ovvoru Pakirvum Punitha Viyalanam

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்
அந்த இயேசுவை உணவாய் உண்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் --2

இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே --2
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே --2
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் --2
நாளைய உலகின் விடியலாகவே

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே --2
இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் --2
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது | Aandavarae Neero En Pathangalai Kazhuvuvathu


ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

நான் செய்வது இன்னதென்று
உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 
பாஸ்கா உணவினை அருந்திட | Pasca Unavai Arunthida

பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து
பந்தியிலே அமர்ந்திருந்தார்
தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி
சீடரிடம் எழுந்து வந்தார்

குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு
கழுவியே துடைத்து விட்டார் பணி வாழ்வின் பெருமை சொன்னார்

சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட
இயேசு வந்த நேரத்திலே
இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது
உரிமையில் கடிந்து கொண்டார்

என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா
ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது
பின்னரே புரிந்து கொள்வாய்
உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில்
என்னோடு பங்கில்லை

ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல
என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும்

முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால்
போதுமென்று அறியாயோ ?
நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு
இந்நேரம் புரியாதோ ?

நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன்
நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள்

இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி
நாமும் வாழ்ந்திடுவோம்
பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை
சீடரின் தகுதியென்போம் (2) - 3  

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

ஆணி கொண்ட உன் காயங்களை | Aani Konda Un Kayangalai

ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2

வலது கரத்தின் காயமே - 2
அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே - 2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாதக் காயமே - 2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே - 2
திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே - 2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல் | Enathu Janamae Naan Unakku Enna Theengu Seithaen Sol


எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய்

எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே
அதனாலே உன் மீட்பருக்குச்
சிலுவை மரத்தை நீ தந்தாய் ! - எனது சனமே

நாற்பது ஆண்டுகள் நான் உன்னை
பாலைநிலத்தில் வழிநடத்தி
உனக்கு மன்னா உணவூட்டி
வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு
சிலுவை மரத்தை நீ தந்தாய் - எனது சனமே

நான் உனக்காக எகிப்தியரை
அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன் நீ என்னைக்
கசையால் வதைத்துக் கையளித்தாய் - எனது சனமே

பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி
எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம்
குருக்களிடத்தில் கையளித்தாய்! - எனது சனமே

நானே உனக்கு முன்பாக
கடலைத் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர்
ஈட்டியினாலே திறந்தாய்! - எனது சனமே

மேகத்தூணில் வழிகாட்டி
உனக்கு முன்னே நான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதிமன்றம்
என்னை இழுத்துச் சென்றாயே! - எனது சனமே

பாலைவனத்தில் மன்னாவால்
நானே உன்னை உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில்
அடித்துக் கசையால் வதைத்தாயே! - எனது சனமே

இனிய நீரைப் பாறையினின்று
உனக்குக் குடிக்கத் தந்தாயே!
நீயோ கசக்கும் காடியை
எனக்குக் குடிக்கத் தந்தாயே! - எனது சனமே

கானான் அரசரை உனக்காக
நானே அடித்து நொறுக்கினேன்
நீயோ நாணல் தடி கொண்டு
எந்தன் சிரசில் அடித்தாயே! - எனது சனமே

அரசர்க்குரிய செங்கோலை
உனக்குத் தந்தது நானன்றோ
நீயோ எந்தன் சிரசிற்கு
முள்ளின் முடியைத் தந்தாயே! - எனது சனமே

உன்னை மிகுந்த வன்மையுடன்
சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்
நீயோ என்னை சிலுவை எனும்
தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்! - எனது சனமே


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நம்பிக்கை தரும் சிலுவையே | Nambikkai Tharum Siluvaiyae

நம்பிக்கை தரும் சிலுவையே
நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய்
உன்னைப் போன்று தழை
பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால்
இனிது தாங்கும் மரமே நீ

மாட்சி மிக்க போரின் வெற்றி
விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி
வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து
ஜெயத்தின் கீதம் ஓதுவாய் (நம்பிக்கை)

தீமையான கனியைத் தின்று
சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கை
கண்டு நொந்த சிருஷ்டிகர்
மரத்தால் வந்த தீங்கை நீக்க
மரத்தை அன்றே குறித்தனர் (இனிய)

வஞ்சகன் செய் சூழ்ச்சி பலவும்
சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்
பகைவன் செய்த கேட்டினின்று
நன்மை விளையச் செய்யவும்
வேண்டுமென்று நமது மீட்பின்
ஒழுங்கில் குறித்து இருந்தது (நம்பிக்கை)

எனவே புனித கால நிறைவில்
தேவபிதா தம் மைந்தனை
விண்ணில் நின்று அனுப்பலானார்
அன்னை கன்னி வயிற்றிலே
ஊன் எடுத்து வெளிவந்தாரே
மண்ணகத்தைப் படைத்தவர் (இனிய)

இடுக்கமான முன்னட்டியிலே
கிடந்து குழந்தை அழுகிறார்
தேவ உடலைத் துகிலில் பொதிந்து
சுற்றி வைத்து கன்னித்தாய்
இறைவன் அவர்தம் கையும் காலும்
கச்சையாலே பிணைக்கின்றார் (நம்பிக்கை)

முப்பதாண்டு முடிந்த பின்னர்
உடலின் காலம் நிறைவுற
மீட்பர் தாமாய் மனமுவந்து
பாடுபடவே கையளித்தார்
சிலுவை மரத்தில் பலியாகிடவே
செம்மறி உயர்த்தப் படலானார் (இனிய)

கசந்த காடி அருந்திச் சோர்ந்து
முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலை துளைத்ததாலே
செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும்
அதனால் தூய்மை ஆயின (நம்பிக்கை)

வளர்ந்த மரமே உன்கிளை தாழ்த்தி
விரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம்
இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின்
உயர்ந்த தணித்துத் தாங்குவாய் (இனிய)

மரமே நீயே உலகின் விலையைத்
தாங்கத் தகுதியாகிய கிளை
திருச்செம்மறியின் குருதி உன்மேல்
பாய்ந்து, தோய்த்ததாதலால்
புயலில் தவிக்கும் உலகிற்கெல்லாம்
புகலிடம் நீ, படகும் நீ (நம்பிக்கை)

பரம திருத்துவ இறைவனுக்கு
முடிவில்லாத மங்களம்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
சரிசமப் புகழ் பெறுகவே
அவர்தம் அன்பின் அருளினாலே
நம்மைக் காத்து மீட்கின்றார் - ஆமென்.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் | Thanthaiyae Um Kaiyil En Aaviyai Oppadaikkintren
 

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்பழ என்னை விடுவித்தருளும்
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும்.

என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்க நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்
நீரே என் கடவுள் என்றேன் என் கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்

கனிந்த உம்திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்
 
  
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

திருச்சிலுவை மரமிதோ | Thiru Siluvai Maramitho

குரு :திருச்சிலுவை மரமிதோ
இதிலேதான் தொங்கியது
உலகத்தின் இரட்சணியம்
எல் : வருவீர் ஆராதிப்போம்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 
ஊர்வலம் போகுது இறுதி ஊர்வலம் போகுது | Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu

ஊர்வலம் போகுது - 3 இறுதி ஊர்வலம் போகுது
அன்று இறைவனின் ஊர்வலம் இன்று மனிதனின் ஊர்வலம் -2
அதில் மாண்புகள் மலர்ந்திடும் புது வாழ்வுகள் பிறந்திடும்

சுமையில்லாமல் பயணமில்லை
சுவையில்லாமல் வாழ்வுமில்லை (2)
சுமைகளை விரும்பி ஏற்றிடும் தோள்களில்
சுமையும் சுவையாகும் இறைவனின் வழியாகும் - 2

வேதனையில்லாமல் பயணமில்லை
வெற்றியில்லாமல் வாழ்வுமில்லை (2)
துன்பமாம் சிலுவை வெற்றியின் சின்னம்
வேதனை உரமாகும் தேவனின் வழியாகும் - 2


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

சிலுவைப்பாதை பாடல்கள் | Siluvai Pathai Padalgal
 
எனக்காக இறைவா எனக்காக | Enakkaga Iraiva Enakkaga

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
 
1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் -எனக்காக இறைவா

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார் -எனக்காக இறைவா

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு -எனக்காக இறைவா

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள் -எனக்காக இறைவா

5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு -எனக்காக இறைவா

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில் -எனக்காக இறைவா

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் -எனக்காக இறைவா

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் -எனக்காக இறைவா

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் -எனக்காக இறைவா

10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர் -எனக்காக இறைவா

11. பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே -எனக்காக இறைவா

12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு -எனக்காக இறைவா

13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து -எனக்காக இறைவா

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று -எனக்காக இறைவா

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

எங்கே சுமந்து போகீறீர் | Engae Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகீறீர்?
சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர்
பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க
எங்கே போகிறீர்

1. மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று
தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி
எங்கே போகிறீர்

2. பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து
எங்கே போகிறீர்

3. கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து
எங்கே போகின்றீர்

4. மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு
மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த
எங்கே போகிறீர்

5. உதிரம் ஆறாய் சிந்தி, உள்ள உரமிழந்து
சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து
எங்கே போகிறீர்

6. கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெராணிக்கம்மாள், வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போகிறீர்

7. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
எங்கே போகிறீர்

8. புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து
எங்கே போகிறீர்

9. சிலுவை பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும்
எங்கே போகிறீர்

10. நீடாடை கழற்றவே, கோடாகோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய் பெருகி, வேதனையால் வருந்தி
எங்கே போகிறீர்

11. நீட்டிய கால் கரத்தில், நீண்ட இரும்பாணிகள்
நிஷ்ட யூதர் அறைந்தும், நேசத்திலே வெந்து
பலி-யாகினீர்

12. சிலுவை பீடமேறி, மும்மணி நேரந் தொங்கி
அரிய பிதாவை வேண்டி, ஆருயிர் ஒப்படைத்து
பலி-யாகினீர்

13. மரி தாய் மடிமீதில், மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால், ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்

14. கர்த்தரின் உடல்தனை, கல்லறைக்குள் அடக்கி
உத்தானம் ஜீவனுமாய், உயிருடன் எழுந்து
 எப்போ வருவீர்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நிந்தையும் கொடிய வேதனையும் | Ninthaiyum Kodiya Vethanaiyum

நிந்தையும் கொடிய வேதனையும்
நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை
சிந்தையில் கொண்டு தியானிக்கவே
தினம் அருள் புரிவீர் ஆண்டவரே

சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு

 

1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்
இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்
மாசற்ற செம்மறி ஆனவர்க்கு
மரண தண்டனையாம் விதித்து நின்றோம்
அவரோ மௌனம் காத்துநின்றார்
அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் -சிலுவையிலே

2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை
பரமனின் திருவுளம் நிறைவுறவே
ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்
ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி
எனைப்பின் செல்பவன் தனை மறுத்து
சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் -சிலுவையிலே

3. சிலுவையின் பாரம் அழுத்தியதால்
திருமகன் தரையில் விழலானார்
வலுவற்ற அடியோர் எழுந்திடவே
வல்லப தேவா வரமருள்வீர்
எமைப் பலப்படுத்தும் அவராலே
எல்லாம் செய்திடக் கூடுமன்றோ -சிலுவையிலே

4. உதிரம் வியர்வைத் தூசியினால்
உருவிழந்திருந்த தன் மகனை
எதிர்கொண்டு வந்த அன்னை மனம்
இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்
அந்நிய காலம் வரையெங்கள்
அடைக்கலமாய் நீ இருந்திடம்மா -சிலுவையிலே

5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல
உதவிய சீமோன் போல் யாமும்
எம் அயலார்க்குத் தயங்காமல்
என்றுமே உதவிடச் செய்தருள்வீர்
நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்
வரம் தர வேண்டுகின்றோம் -சிலுவையிலே

6. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்
துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்
இகமென்ன சொல்லும் என நினைந்து
இழந்திடலாமோ விசுவாசம்
இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்
எய்துவர் அழியாப் பேரின்பம் -சிலுவையிலே

7. மீண்டும் மீண்டும் பாவத்திலே
விழுந்திடும் பாவியை மீட்டிடவோ
ஈடிணையில்லா இறைமகனார்
இவ்விதம் புழுதியில் விழலானார்
நமை நிதம் இறைவன் மன்னிப்பதால்
நாமும் பிறரை மன்னிப்போம் -சிலுவையிலே

8. எங்கணும் நன்மை செய்தவர்க்கு
ஏனிந்தக் கோலம் என வருந்திப்
பொங்கிடும் கடல்போல் அழுதரற்றிப்
புண்ணிய மாதரும் புலம்பினரே
அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்
ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர் -சிலுவையிலே

9. அளவற்ற களைப்போ பெருந்துயரோ
அடியற்ற மரம்போல் விழலானார்
உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே
உயர்பரன் அடிமை போல் விழலானார்
தயையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்
தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான் -சிலுவையிலே

10. உடையினை சேவகர் பிடித்திழுத்து
உரித்திடும் வேளை காயமெல்லாம்
மடைதிறந்தோடும் வெள்ளமென
மறுபடி உதிரம் சொரிந்ததையோ
அந்நியரும் வழிப்போக்கரும் நாம்
அடக்குவோம் தீய ஆசைகளை -சிலுவையிலே

11. கழுமரம் என்ற சிலுவையிலே
களங்கமில்லாத இறைமகனை
விழுமிய நலம் பல புரிந்தவரை
வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்
ஒரு கணமேனும் இயேசுவேயாம்
உமைப் பிரியாமல் வாழச் செய்வீர் -சிலுவையிலே

12. நண்பனுக்காக தன்னுயிரை
நல்குவதினுமேலான அன்பு
கொண்டவர் யாருமே இல்லையன்றோ?
கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்
தமையன்பு செய்தார் நமக்காக
தமைமுழுதும் அவர் கையளித்தார் -சிலுவையிலே

13. மண்ணில் கோதுமை மணி விழுந்து
மடிந்தால் தானே பலன் அளிக்கும்
விண்ணில் வாழ்வு நமக்கருள
விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்
வியாகுல அன்னை மடிவளரும்
மீட்பரே எம்மைக் காத்தருள்வீர் -சிலுவையிலே

14. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்
ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்
விலகும் மரண இருள் திரையும்
விளங்கும் கிறிஸ்துவின் அருள் ஒளியால்
கிறிஸ்துவே எனக்கு உயிராகும்
மரணம் எனக்கு ஆதாயம் -சிலுவையிலே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


19 comments:

  1. superaga ullathu by veppankadu irudayamatha church jenish

    ReplyDelete
  2. i want siluvai pathai padel **arukinrar thalladi thavazthu kalaipodu**

    ReplyDelete
  3. i want siluvai pathai padel **arukinrar thalladi thavazthu kalaipodu**

    ReplyDelete
    Replies
    1. https://m.facebook.com/story.php?story_fbid=1049447498490068&id=100002744838745

      Delete
  4. DEAR SIR...ENAKU SILUVAI PATHAI PADAL "ARUKINRAR THALLADI THAVAZTHU KALAIPODU" ENRA PALALIN MP3 OR LYRIC VENDUM SIR

    MAIL ID:prasathc13@gmail.com

    ReplyDelete
    Replies
    1. https://m.facebook.com/story.php?story_fbid=1049447498490068&id=100002744838745

      Delete
  5. its is better to upload the songs in mp3 format.

    ReplyDelete
  6. Very Nice blog...towards spiritual....Thank You & God Bless You...

    ReplyDelete
  7. ஏறுகிறார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
    என் ஏசு குருசை சுமந்தே
    என் நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

    கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
    சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்கிறார்
    அந்தப் பிலாத்தும் கையை கழுவி
    ஆண்டவரை அனுப்புகிறேன்

    மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
    நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
    இரத்தமும் நீரும் ஓடி வந்தே
    இரட்சகரை நோக்கியே பார்

    இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
    சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
    நேசிக்கின்றாயோ ஏசு நாதரை
    நேசித்து வா குரு செடுத்தே

    சேவல் கூவிடும் மூன்று வேளையும்
    சொந்த குரவை மறுதலித்தான்
    ஓடி ஒளியும் பேதுருவையும்
    தேடி அன்பாய் நோக்குகின்றார்

    பின்னே நடந்தே அன்பின் சீஷன்போல்
    பின்பற்றிவா சிலுவை வரை
    காடியைபோல் கசந்திருக்கும்
    கஷ்டங்கள் அவரிடம் சொல்

    செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
    சொந்த தாயின் அன்பதுவே
    எருசலேமே எருசலேமே
    என்றழுதார் கண்கலங்க

    ReplyDelete
  8. ஏறுகிறார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
    என் ஏசு குருசை சுமந்தே
    என் நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

    கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
    சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்கிறார்
    அந்தப் பிலாத்தும் கையை கழுவி
    ஆண்டவரை அனுப்புகிறேன்

    மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
    நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
    இரத்தமும் நீரும் ஓடி வந்தே
    இரட்சகரை நோக்கியே பார்

    இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
    சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
    நேசிக்கின்றாயோ ஏசு நாதரை
    நேசித்து வா குரு செடுத்தே

    சேவல் கூவிடும் மூன்று வேளையும்
    சொந்த குரவை மறுதலித்தான்
    ஓடி ஒளியும் பேதுருவையும்
    தேடி அன்பாய் நோக்குகின்றார்

    பின்னே நடந்தே அன்பின் சீஷன்போல்
    பின்பற்றிவா சிலுவை வரை
    காடியைபோல் கசந்திருக்கும்
    கஷ்டங்கள் அவரிடம் சொல்

    செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
    சொந்த தாயின் அன்பதுவே
    எருசலேமே எருசலேமே
    என்றழுதார் கண்கலங்க

    ReplyDelete
  9. thank you so mach for giving this song

    ReplyDelete
  10. Dear Brother, I really really really thank you for the wonderful work you had done, god really bless you with more power, talent and will to do further in God's work
    regards
    philip
    9448345146

    ReplyDelete
  11. If you could allow me i'd like to download some songs for the lent season.
    I am a member of the Sacred heart church, Batticaloa, Sri Lanka choir.
    Raveendra Ignatious Rajendram

    ReplyDelete
    Replies
    1. Hi Raveendra,
      Please use below link to download Tamil lent songs.

      https://drive.google.com/drive/u/0/folders/0BwMmPbWTj0xuMk1FbjdoN0ktYms

      Thanks,
      Stanley

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  12. Thank you so much Mr. Stanley they are useful and are in time

    ReplyDelete
  13. Thank u sir .due to lock down every church closed .so l felt very said ,how we will pray.this is very useful to Mee
    This time again tq sir

    ReplyDelete
  14. The hymns which I was looking for are all here Thank you so much

    ReplyDelete