1. உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் | Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar
உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை - 2
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா - 2
இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்
பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம் - 2
எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் - 2
அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை - 2
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் - 2
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2. பாமாலை பாடிடுவோம் சவேரியாரே | Paamalai Padiduvom Savariyarae
நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு
கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே
இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே - 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே - 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே
தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே - 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -வாழியவே
கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையில
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே - 2
அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே - 2
நல்லாசி தந்திடுமே சவேரியாரே -வாழியவே
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. annale saveriyare , inthiya naaddin marai pothakare..
ReplyDelete2. annai sahai.. anpudan avai pottiduvom
do you have the song?
I HAVE THESE SONGS
ReplyDeleteI HAVE THESE SONGS
ReplyDelete