Saturday, 11 May 2013

திருப்பலி வருகைப் பாடல்கள் | Tamil Catholic Mass Entrance Songs

1. இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி | Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
 
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே - 2  

மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் -வாராய்

மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே - 2
திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம்  -வாராய்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2. அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே | Anbinil Pirantha Iragulam Namae

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்
 
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

3. அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு| Azhaikkum Iraivan Kuralai Kaettu

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் - 2
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2
படைத்த தேவன் புகழை
ப் பரப்ப பணிந்து வாருங்கள்

பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் -2
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே -2

பரமதேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் - 2
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

4. அழைக்கிறார் இயேசு ஆண்டவர் | Azhaikiraar Yesu Andavar

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் - 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட - 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
 
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் - 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் - 2

வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

5. உன் இதய வாசல் தேடி வருகிறேன் | Un Ithaya Vasal Thedi Varugintren

உன் இதய வாசல் தேடி வருகிறேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீ இல்லையேல் நானில்லையே - 2
நான் வாழ என்னுள்ளம் வா

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா

குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்
நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா 

உருவங்கள் மாறலாம் உருமாறிப் போகலாம்
உருகும் மனம் கருகலாம் உறவும் என்னை வெறுக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா   

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

6. அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் | Archanai Malaraga Aalayatthil Varugintrom

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் - 2
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் - 2
 
தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே
பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்

உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்

அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||  

7. இணைந்திடுவோம் இறைமக்களே | Inainthiduvom Iraimakkalae

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்
சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே
 
கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்
மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்
குடும்பமாய் இணைக்கின்றது
நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது  (2)
பலியினில் கலந்து உறவினில் இணைய
நம்மையே அழைக்கின்றது -இன்று  (2) -கூடிடுவோம்

இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க
பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது  (2)
சோதனை வென்று சாதனை படைக்க
ஆற்றல் தருகின்றது  -நமக்கு
(2) -கூடிடுவோம் 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||  

8. அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம் | Arudkaram Thaedi Un Aalaya Peedam

அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் - 2
 
ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை - 2
மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க - 2
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்

ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றதே - 2
தேற்றிட விரையும் எம் தலைவா - உம்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பரிவோ
துயர் வருமோ துணையிருக்க - 2
நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும் 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||  

9. வரம் கேட்டு வருகின்றேன் இறைவா | Varam Kaettu Varugintren Iraiva

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2
 
பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - 2 - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - 2 - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் - என்
இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் - 2
ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் - 2 - நல்
ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் - நல்
நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் - 2
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் - 2 - உன்
அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||  

10. வாருங்கள் இறைமக்களே | Varungal Iraimakkalae 

வாருங்கள் இறைமக்களே
இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட 

வாருங்கள் இறைமக்களே
 
குருவுடன் கூடி குடும்பமாய் மாறி - 2
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
 
இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று - 2
இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே

பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து - 2
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

11. திருக்குலமே எழுந்திடுக | Thirukkulamae Elunthiduga

திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம்
ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே - 2

ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் - 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் - 2
அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்

இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் - 2
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் - 2
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவர் அன்பே நமை நடத்தும்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||   

12. வாருங்கள் இறைமக்களே  | Vaarungal Iraimakkalae 

வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்
நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக
அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்

சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே
எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் - 2
வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே
வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம்
தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்

அருள் ஒளி மனதினில் கலந்திடவே
கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் - 2
மனிதனில் மனிதம் மலர்ந்திடவே
எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம்
உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே
இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

13. தலைவா உனை வணங்க | Thalaiva Unai Vananka

தலைவா உனை வணங்க - என்
தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க - நான்
சிரமே தாள் பணிந்தேன்

அகல்போல் எரியும் அன்பு - அது
பகல்போல் மணம் பரவும்
நிலையாய் உனை நினைத்தால் - நான்
மலையாய் உயர்வடைவேன் - 2
 
நீர்போல் தூய்மையையும் - என்
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் - என்னைச்
சீக்கிரம் தூக்கிவிடும் - 2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

10 comments: