எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2
செங்கை அதிலே தங்க புஷ்பம்
தங்கும் கோலை ஏந்திடும் -2
கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே -2
சென்னி மகுட முடி புனைந்த
மன்னர் கோத்ர மாதவா -2
இயேசு நாதரின் செல்வத் தாதை நீ
நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசைகொண்டு பாடவே -2
தந்தை என்றுன்னை வந்து பாடினோம்
உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய் -2
அந்திக்காலை வந்த வேளை
வந்து உதவி செய்திட்டாய் -2
Engal Kavalam soosai thanthaiyin
Mangalangal engum solli ingu paduvom -2
Sengai athilae thanga puahbam
thangum kolai yenthidum -2
Kanni Thayarin partha neeyallo
unnathamar perum matchi utta pakkiyanae -2
Senni mahuda mudi punaintha
mannar kothra mathava -2
Yesunatharin selva thathai nee
nesa puthra thuthiyaam pada koodi vanthomae -2
Thesam orungum thisaigal engum
Aasai kondu padavae -2
Thanthai entrunnai vanthu padinom
unthan mainthan sonthamentru emmai katthittai -2
Anthikalai vantha velai
vanthu uthavi seithittai -2
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2. மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் | Mathumalar Niraikodi Kaiyilanthum
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறைசூசை மாமுனியே
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணை செய்து எமையாளும் தாதையரே
வானுலகிழந்ததால் கர்வமுற்ற
வன்மனக் கூளியின் வலையறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம்
ஒளிநிறை கதிரோனை ஆடை எனும்
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த
துளிநிகர் அருள்பொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய்
தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து
துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து
ஆதிரையோரைக் கண் பார்த்துனது
ஆசியை அளித்தருள் மாதவனே
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
nice songs. thanks, can i download this?
ReplyDeleteDear Brother/ Sister, song downloading facility is not available right now. I will make it soon.
ReplyDeleteதாதை சூசை மாமுனியே தாவிதின் குல சிந்தாமணியே என்ற பாடலை அறிந்தவர் எனக்கறிவித்திட வேண்டுகிறேன்
ReplyDeleteMy God father sosai
ReplyDeleteவானோர்கள் வாழ்த்திடும் வல்ல இயேசுவின் வளர்ப்பு தந்தையே எங்கள் சூசை தந்தையே பாடல் பதிவு செய்ய வேண்டுகிறேன்
ReplyDelete