Tuesday, 9 April 2013

அன்னைக்குக் கரம் குவிப்போம் | Annaikku Karam Kuvippom

அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் – 2

கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

2 comments:

  1. Spelling mistake முன்னவனின் illai Mannavan

    ReplyDelete
  2. There is no spelling mistakes

    ReplyDelete