Tuesday, 9 April 2013

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே | Viyakula Mamariyae Thiyakatthin Mathavae

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)

பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை
கரங்களை விரித்தே கள்வனைப் போல்
கழுமரத்தினில் கண்டதினால்

கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே
மண்ணவர்க்காகத் தன்னுயிரை
இன்று மாய்த்திடக் கண்டதினால்

3 comments:

  1. Annaiya yen thaya unni manamuraga vendi yanaku nalla palan kidaithathu Tet exam eluthiyirunthan pass mark kidaithathu

    ReplyDelete
  2. நல்ல பாடல்...... மனம் நெகிழ்ந்து போன பாடல்

    ReplyDelete