Click here to view Tamil Siluvai Paathai padalgal| சிலுவைப் பாதை பாடல்கள்
நிலை 1: இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்.
| |
பாடல்: பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர் பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள். | |
செபம்: | |
எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோ அறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும், வழியும், உண்மையுமான உம்மையே நாங்கள் பின்பற்றவும், தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 2: இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
| |
பாடல்: தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை மாளாத் துயரால் துடிக்க வைத்தார் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவை எங்கள் பாவங்களின் விளைவு என்பதை உணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப் பழி சுமத்தாமல் இருக்கவும், எங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 3: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் விழுகிறார்.
| |
பாடல்: விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும் எழுந்தீர் துயர்களின் நினைவோடு எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் விழுகிறார் | |
செபம்: | |
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம் குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால் வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென் | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 4: இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.
| |
பாடல்: தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத் தாங்கிய அன்னை துயருற்றாள் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! உம்மை ஈன்றெடுத்த அன்னை மரியா உம் துன்பங்களைக் கண்டு மனமுடைந்தார். அந்த அன்னையின் அரவணைப்பில் நாங்கள் என்றும் மகிழ்வுகொள்ள அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 5: இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.
| |
பாடல்: மறுத்திட முடியா நிலையாலே - சீமோன் வருத்தினார் தன்னை உம்மோடு எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார் | |
செபம்: | |
அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்துசெல்ல சீமோன் என்பவர் துணைசெய்தார். எங்கள் சகோதரர் சகோதரிகளின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திட எங்களுக்குத் துணைசெய்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 6: இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.
| |
பாடல்: நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின் விலையாய் மாதின் சிறு துணியில் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும் கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணி அன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார். எங்கள் வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் கவலையால் வாடும் அனைவரின் துன்பங்களையும் துடைத்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 7: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.
| |
பாடல்: ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களை அழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர். ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும் கண்டு துவழ்ந்துவிடாமல் துணிந்து எழுந்து, உம்மேல் நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 8: இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
| |
பாடல்: விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கரிய துன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர். தன்னலம் பாராது பிறர் நலம் நோக்கவும், துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்கு நல்மனத்தைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திட அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 9: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார்.
| |
பாடல்: மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால் ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால் உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள் பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நாங்கள் தூய்மையோடு வாழவும், பாவத்தை வெறுத்து, உம் அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 10: இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.
பாடல்: உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! உம் உடைகளைக் களைந்தவர்கள் உம்மை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமை, அரசியல் அடக்குமுறை, அதிகாரப்பாணி போன்ற அவலங்களால் மனித உரிமையும் மாண்பும் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்படுகின்ற எம் சகோதரர் சகோதரியரை நினைத்துப் பார்க்கின்றோம். உம் உடன்பிறப்புகளாகிய அவர்களது மாண்பினைக் காத்துப் போற்றிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 11: இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.
| |
பாடல்: பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்டபோது உம் கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்கள் காயங்களைக் குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால் நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகிய சிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியது போல நாங்களும் எங்கள் துன்ப துயரங்களை உம் சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களை இடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 12: இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.
பாடல்:இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர் சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின் பிள்ளைகளாக்கிட நீர் எம்மில் ஒருவராக மாறினீர். சிலுவையில் தொங்கியபோது நீர் உரைத்த சொற்களை நினைத்துப் பார்க்கிறோம். “தாகமாயிருக்கிறது” என்று கூறிய இயேசுவே, எங்கள் ஆன்ம தாகத்தை வளர்த்தருளும். “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி உயிர்நீத்த இயேசுவே, நாங்கள் கடவுளின் திருவுளத்தை இறுதிவரை நிலைத்து நின்று நிறைவேற்றிட அருள்தாரும். ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 13: இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள்.
| |
பாடல்: துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை உயிரற்ற உடலின் மடிசுமந்து எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார். அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காக உயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வு வழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும் பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திட அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
நிலை 14: இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.
| |
பாடல்: ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர் அடங்கிய கல்லறை உமதன்று எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக | |
முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். | |
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். | |
இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். | |
செபம்: | |
அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில் வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகி அழிந்து போகவில்லை. நாங்களும் திருமுழுக்கின் வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம். பாவத்திற்கு இறந்தோம். ஆனால், நீர் புத்துயிர் பெற்று எழுந்தது போல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு அளித்து, புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்ற வாழ்வு இவ்வையகம் பெற்று மகிழ்ந்திட அருள்வீராக. ஆமென்! | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும் | |
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். | |
பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். | |
என்றென்றும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. (மூன்று முறை) | |
பரிசுத்த பாப்பானவரின் கருத்துக்களுக்காக செபிப்போமாக. | |
ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். | |
Dear friend in Christ,
ReplyDeleteI found Tamil Siluvai Paathai from your place after my long search for it to use in our Church Tamil Ministry.
Thanks a lot,
God Bless you always.
Best Regards,
Dominic, Singapore.
Simple heartable valuable siluvaipathai
DeleteThanks very nice siluvaiathai
DeleteThank you friend
ReplyDeletevery nise
ReplyDeletevery nise
ReplyDeletevery nise
ReplyDeleteThank God for I found this. This way of the cross is very much useful in my office time.... Thank you very much
ReplyDeleteSuperb...
ReplyDeleteGod bless you!
thanks.
ReplyDeletegod bless you
It was a timely help.. thank you so much for this upload! மிக்க நன்றி
ReplyDeleteGlory to God Amen
ReplyDeleteSuper. Short and sweet 👌👌👌
ReplyDeletevery nice.... it's very awesome to pray... with in short period... siluvai pathai feels better.... to us
ReplyDeleteThank you so much for this . . . .
ReplyDeleteThank you so much for this
ReplyDeleteVery Useful thanks
ReplyDeleteVery usefull thank you...
ReplyDeleteIt is very useful in this lend days for prayer and meditation and for change in moral life Thank you Brother
ReplyDeleteVery useful
ReplyDeleteIn Tamil kurikia siluvai pathai is very useful I like this to make ourselves Thank you
ReplyDeleteஎத்தனை புதிய சிலுவைப்பாதை முறைகள் வந்திருந்தாலும், பழமையான இந்த முறை இன்றும் நிறைவானதாக தோன்றுகிறது!
ReplyDeleteநன்றி!!!
டான் போஸ்கோ
Very super Nice Selluvaipathai
ReplyDeleteThank you. In the name of Jesus Christ....Amen
ReplyDeleteThank you ❤🙏
ReplyDeleteசிலுவைப் பாதையில் பயணிக்க சிறந்த ஒரு வழியை காண்பித்த சகோதரர் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். நன்றி
ReplyDeletesuper
ReplyDelete