Sunday, 16 June 2013

சிலுவைப்பாதை பாடல்கள் | Siluvai Pathai Padalgal

சிலுவைப்பாதை பாடல்கள் | Siluvai Pathai Padalgal
1
எனக்காக இறைவா எனக்காக | Enakkaga Iraiva Enakkaga

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் -எனக்காக இறைவா

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார் -எனக்காக இறைவா

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு -எனக்காக இறைவா

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள் -எனக்காக இறைவா

5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு -எனக்காக இறைவா

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில் -எனக்காக இறைவா

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் -எனக்காக இறைவா

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் -எனக்காக இறைவா

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் -எனக்காக இறைவா

10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர் -எனக்காக இறைவா

11. பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே -எனக்காக இறைவா

12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு -எனக்காக இறைவா

13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து -எனக்காக இறைவா

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று -எனக்காக இறைவா

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

எங்கே சுமந்து போகீறீர் | Engae Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகீறீர்?
சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர்
பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க
எங்கே போகிறீர்

1. மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று
தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி
எங்கே போகிறீர்

2. பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து
எங்கே போகிறீர்

3. கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து
எங்கே போகின்றீர்

4. மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு
மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த
எங்கே போகிறீர்

5. உதிரம் ஆறாய் சிந்தி, உள்ள உரமிழந்து
சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து
எங்கே போகிறீர்

6. கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெராணிக்கம்மாள், வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போகிறீர்

7. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
எங்கே போகிறீர்

8. புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து
எங்கே போகிறீர்

9. சிலுவை பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும்
எங்கே போகிறீர்

10. நீடாடை கழற்றவே, கோடாகோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய் பெருகி, வேதனையால் வருந்தி
எங்கே போகிறீர்

11. நீட்டிய கால் கரத்தில், நீண்ட இரும்பாணிகள்
நிஷ்ட யூதர் அறைந்தும், நேசத்திலே வெந்து
பலி-யாகினீர்

12. சிலுவை பீடமேறி, மும்மணி நேரந் தொங்கி
அரிய பிதாவை வேண்டி, ஆருயிர் ஒப்படைத்து
பலி-யாகினீர்

13. மரி தாய் மடிமீதில், மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால், ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்

14. கர்த்தரின் உடல்தனை, கல்லறைக்குள் அடக்கி
உத்தானம் ஜீவனுமாய், உயிருடன் எழுந்து
 எப்போ வருவீர்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 
நிந்தையும் கொடிய வேதனையும் | Ninthaiyum Kodiya Vethanaiyum

நிந்தையும் கொடிய வேதனையும்
நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை
சிந்தையில் கொண்டு தியானிக்கவே
தினம் அருள் புரிவீர் ஆண்டவரே

சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு

 

1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்
இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்
மாசற்ற செம்மறி ஆனவர்க்கு
மரண தண்டனையாம் விதித்து நின்றோம்
அவரோ மௌனம் காத்துநின்றார்
அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் -சிலுவையிலே

2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை
பரமனின் திருவுளம் நிறைவுறவே
ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்
ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி
எனைப்பின் செல்பவன் தனை மறுத்து
சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் -சிலுவையிலே

3. சிலுவையின் பாரம் அழுத்தியதால்
திருமகன் தரையில் விழலானார்
வலுவற்ற அடியோர் எழுந்திடவே
வல்லப தேவா வரமருள்வீர்
எமைப் பலப்படுத்தும் அவராலே
எல்லாம் செய்திடக் கூடுமன்றோ -சிலுவையிலே

4. உதிரம் வியர்வைத் தூசியினால்
உருவிழந்திருந்த தன் மகனை
எதிர்கொண்டு வந்த அன்னை மனம்
இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்
அந்நிய காலம் வரையெங்கள்
அடைக்கலமாய் நீ இருந்திடம்மா -சிலுவையிலே

5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல
உதவிய சீமோன் போல் யாமும்
எம் அயலார்க்குத் தயங்காமல்
என்றுமே உதவிடச் செய்தருள்வீர்
நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்
வரம் தர வேண்டுகின்றோம் -சிலுவையிலே

6. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்
துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்
இகமென்ன சொல்லும் என நினைந்து
இழந்திடலாமோ விசுவாசம்
இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்
எய்துவர் அழியாப் பேரின்பம் -சிலுவையிலே

7. மீண்டும் மீண்டும் பாவத்திலே
விழுந்திடும் பாவியை மீட்டிடவோ
ஈடிணையில்லா இறைமகனார்
இவ்விதம் புழுதியில் விழலானார்
நமை நிதம் இறைவன் மன்னிப்பதால்
நாமும் பிறரை மன்னிப்போம் -சிலுவையிலே

8. எங்கணும் நன்மை செய்தவர்க்கு
ஏனிந்தக் கோலம் என வருந்திப்
பொங்கிடும் கடல்போல் அழுதரற்றிப்
புண்ணிய மாதரும் புலம்பினரே
அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்
ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர் -சிலுவையிலே

9. அளவற்ற களைப்போ பெருந்துயரோ
அடியற்ற மரம்போல் விழலானார்
உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே
உயர்பரன் அடிமை போல் விழலானார்
தயையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்
தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான் -சிலுவையிலே

10. உடையினை சேவகர் பிடித்திழுத்து
உரித்திடும் வேளை காயமெல்லாம்
மடைதிறந்தோடும் வெள்ளமென
மறுபடி உதிரம் சொரிந்ததையோ
அந்நியரும் வழிப்போக்கரும் நாம்
அடக்குவோம் தீய ஆசைகளை -சிலுவையிலே

11. கழுமரம் என்ற சிலுவையிலே
களங்கமில்லாத இறைமகனை
விழுமிய நலம் பல புரிந்தவரை
வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்
ஒரு கணமேனும் இயேசுவேயாம்
உமைப் பிரியாமல் வாழச் செய்வீர் -சிலுவையிலே

12. நண்பனுக்காக தன்னுயிரை
நல்குவதினுமேலான அன்பு
கொண்டவர் யாருமே இல்லையன்றோ?
கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்
தமையன்பு செய்தார் நமக்காக
தமைமுழுதும் அவர் கையளித்தார் -சிலுவையிலே

13. மண்ணில் கோதுமை மணி விழுந்து
மடிந்தால் தானே பலன் அளிக்கும்
விண்ணில் வாழ்வு நமக்கருள
விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்
வியாகுல அன்னை மடிவளரும்
மீட்பரே எம்மைக் காத்தருள்வீர் -சிலுவையிலே

14. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்
ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்
விலகும் மரண இருள் திரையும்
விளங்கும் கிறிஸ்துவின் அருள் ஒளியால்
கிறிஸ்துவே எனக்கு உயிராகும்
மரணம் எனக்கு ஆதாயம் -சிலுவையிலே




|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை || Thozhil Siluvai Nenjil Kolgai

தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை
சுமந்தே இயேசு போகின்றார்
துணிந்து தேவன் போகின்றார்

1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே
நீதியின் வாயில் மூடியதாலே
முள்முடி தரித்து உலகை நினைத்து
அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே.

2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை
அவனியில் வாழும் அனைவருக்காகவும்
தாமே அணைத்து தோளில் இணைத்து
கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே.

3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக
முடியா நிலையில் நிலை தடுமாறி
தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து
எழுந்து நடந்திட ஆற்றல் பெற்றாரே.

4 நான்காம் நிலையில் தளர்வுற்ற மகனை
தாய்மரி கண்டு தேற்றுகின்றாரே
உலகம் விடிந்திட தீமை அழிந்திட
வீரத்தாய் அவள் விடை கொடுத்தாளே.

5 ஐந்தாம் நிலையில் சுமைதனை பகிர்ந்திட
சிரேன் நகரத்து சீமோன் உதவிட
உதவும் பாடத்தை உயர்ந்த வேதத்தை
உலகிற்கு சீமோன் எடுத்துச் சொன்னாரே.

6 ஆறாம் நிலையில் ஆண்டவர் முகத்தை
துடைத்திட விரோணிக்காள் துணிந்து விட்டாரே
பூமியில் பெண்கள் துணிச்சலின் தூண்கள்
என்பதை விரோணிக்காள் உணர்த்தி விட்டாரே.

7 ஏழாம் நிலையில் இரண்டாம் முறையாய்
பூமியில் விழுந்தார் விடியலின் விதையாய்
மண்ணில் விழாமல் மறுபடி எழாமல்
கோதுமை மணியும் பயனளிக்காதே.

8 எட்டாம் நிலையில் எருசலேம் வீதியில்
ஆறுதல் அளித்தனர் கருணையின் மகளிர்
அழுவதை நிறுத்தி அநீதியை எதிர்த்து
குரல் கொடுப்பதுவே ஆறுதல் ஆகும்.

9 ஒன்பதாம் நிலையில் மூன்றாம் முறையாய்
முழு முதல் தலைவன் வீழ்ந்திடலானார்
பாரம் அழுத்த சோகம் வருத்த
லட்சிய தாகத்தால் துடித்தெழுந்தாரே.

10 பத்தாம் நிலையில் அவமான சிகரத்தில்
அணிந்துள்ள ஆடையை அகற்றியதாலே
யாவும் இழந்து தலையை கவிழ்ந்து
லட்சிய ஆடையை உடுத்தி நின்றாரே.

11 பதினொன்றாம் நிலையில் மாசற்ற இயேசுவை
சிலுவையில் அறைந்தனர் தீமையின் ஏவலர்
பாவம் ஒருபுறம் பழியோ மறுபுறம்
இதுதான் உலகின் நடைமுறை பாடம்.

12 பனிரெண்டாம் நிலையில் கள்வரின் நடுவில்
கொடூரமாய் இயேசு உயிர் துறந்தாரே
போராளி இறப்பில் போராட்டம் வலுப்பெறும்
இதுதான் விடியலின் வைகறை கோலம்.

13 பதிமூன்றாம் நிலையில் மரியாவின் மடியில்
மரித்த மகனுக்கு தாலாட்டுப் பாட்டு
தாயின் மடிதான் என்றென்றும் தஞ்சம்
தரணிக்கு முழுவதும் இதுதான் வேதம்.

14 பதினான்காம் நிலையில் கல்லறை தனிலே
இயேசுவின் உடலை அடக்கம் செய்தாரே
கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
தொடர்ந்திடும் பயணம் உன்கதை கூறும்.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


24 comments:

  1. அன்புள்ள கடகுளம் web owner அவர்களுக்கு..,
    கிறிஸ்துவின் அன்பின் வணக்கம். என்னுடைய பெயர் ANTONY RAJA.Cr. எனக்கு சிலுவைப்பாதை பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம். சிலுவைப்பாதை பாடல்கள் எந்த வெப் சைட்டில் இருந்தாலும் அதை தேடி கண்டுபிடித்து கேட்டுவிடுவேன்.
    தங்களிடம் ''எனக்காக இறைவா எனக்காக
    இடர்பட வந்தீர் எனக்காக'''
    இருப்பின் என்னுடைய மெயில் முகவரிக்கு அனுப்ப இயன்றால் அனுப்புமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. http://www.bibleintamil.com/iraialai/s1164.htm

      Delete
  2. DEAR SIR...ENAKU SILUVAI PATHAI PADAL "YERUKINRAR THALLADI THAVAZTHU KALAIPODU" ENRA PALALIN MP3 OR LYRIC VENDUM SIR

    MAIL ID:prasathc13@gmail.com

    ReplyDelete
  3. Enakkum ppasumalaikvl@gmail.Com

    ReplyDelete
  4. தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை
    சுமந்தே இயேசு போகின்றார்
    துணிந்து தேவன் போகின்றார்

    1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே
    நீதியின் வாயில் மூடியதாலே
    முள்முடி தரித்து உலகை நினைத்து
    அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே..
    2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை
    அவனியில் வாழும் அனைவருக்காகவும்
    தாமே அணைத்து தோளில் இணைத்து
    கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே...
    3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக
    முடியா நிலையில் நிலை தடுமாறி
    தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து
    எழுந்து நடந்திட ஆற்றல் பெற்றாரே...
    4 நான்காம் நிலையில் தளர்வுற்ற மகனை
    தாய்மரி கண்டு தேற்றுகின்றாரே
    உலகம் விடிந்திட தீமை அழிந்திட
    வீரத்தாய் அவள் விடை கொடுத்தாளே..
    5 ஐந்தாம் நிலையில் சுமைதனை பகிர்ந்திட
    சீரேன் நகரத்து சீமோன் உதவிட
    உதவும் பாடத்தை உயர்ந்த வேதத்தை
    உலகிற்கு சீமோன் எடுத்துச் சொன்னாரே...
    6 ஆறாம் நிலையில் ஆண்டவர் முகத்தை
    துடைத்திட ரோணிக்காள் துணிந்து விட்டாரே
    பூமியில் பெண்கள் துணிச்சலின் தூண்கள்
    என்பதை ரோணிக்காள் உணர்த்தி விட்டாரே...
    7 ஏழாம் நிலையில் இரண்டாம் முறையாய்
    பூமியில் விழுந்தார் விடியலின் விதையாய்
    மண்ணில் விழாமல் மறுபடி எழாமல்
    கோதுமை மணியும் பயனளிக்காதே..
    8 எட்டாம் நிலையில் எருசலேம் வீதியில்
    ஆறுதல் அளித்தனர் கருணையின் மகளிர்
    அழுவதை நிறுத்தி அநீதியை எதிர்த்து
    குரல் கொடுப்பதுவே ஆறுதல் ஆகும்..
    9 ஒன்பதாம் நிலையில் மூன்றாம் முறையாய்
    முழு முதல் தலைவன் வீழ்ந்திடலானார்
    பாரம் அழுத்த சோகம் வருத்த
    லட்சிய தாகத்தால் துடித்தெழுந்தாரே...
    10 பத்தாம் நிலையில் அவமான சிகரத்தில்
    அணிந்துள்ள ஆடையை அகற்றியதாலே
    யாவும் இழந்து தலையை கவிழ்ந்து
    லட்சிய ஆடையை உடுத்தி நின்றாரே..
    11 பதினொன்றாம் நிலையில் மாசற்ற இயேசுவை
    சிலுவையில் அறைந்தனர் தீமையின் ஏவலர்
    பாவம் ஒருபுறம் பழியோ மறுபுறம்
    இதுதான் உலகின் நடைமுறை பாடம்..
    12 பனிரெண்டாம் நிலையில் கள்வரின் நடுவில்
    கொடூரமாய் இயேசு உயிர் துறந்தாரே
    போராளி இறப்பில் போராட்டம் வலுப்பெறும்
    இதுதான் விடியலின் வைகறை கோலம்..
    13 பதிமூன்றாம் நிலையில் மரியாவின் மடியில்
    மரித்த மகனுக்கு தாலாட்டுப் பாட்டு
    தாயின் மடிதான் என்றென்றும் தஞ்சம்
    தரணிக்கு முழுவதும் இதுதான் வேதம்..

    14 பதினான்காம் நிலையில் கல்லறை தனிலே
    இயேசுவின் உடலை அடக்கம் செய்தாரே
    கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
    தொடர்ந்திடும் பயணம் உன்கதை கூறும்.....

    ReplyDelete
    Replies
    1. பாடல் வரிகளுக்கு நன்றி!

      Delete
    2. Hi thanks for these lines and I need audio and organ nots for these songs
      Maill : emayuran19@gmail.com

      Delete
  5. hi I need the audio for all above songs

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Hi Michael Stanley
    Thanks for the way of the cross songs. I’m Rex Fernando from Singapore. I’m in charge of Tamil choir in various Churches here in Singapore. Every year we introduce new songs for the stations of the cross, especially the old traditional ones. I saw these two songs in site. Could you please send me the audio file if you have for these 2 songs. I have another 8 songs with lyrics n audio. I can pass it to you as well.
    1. Tholil Siluvai
    2. Ninthaiyum kodiya vethanai
    My email address is rexyboy67@gmail.com
    Please keep in touch.
    Thanks

    ReplyDelete
  8. 1 உன்னை வெறுத்த பரபாசை உவந்து ஏற்றுக் கொண்டனர் சிலுவை ஏற்று அதன் வழி மீட்க வந்தாயோ 2
    2தோளில் சிலுவை ஏற்கின்றார் துணிந்து கல்வாரி செல்கின்றார் மீட்கவே பழியை சுமந்தாயோ 2

    3 பாரச்சிலுவை அழுத்தவே பரமன் கீழே விழுகின்றார் கண்ணீர் துன்பம் துடைத்து நீர் மண் மீது சாய்ந்தாயோ
    4 அன்பு மகனை அன்னை மரி துன்ப நிலையில் காண்கின்றாள்
    மகனின் கோலம் கண்டதும் மரியே அழுதாயோ. 2
    5 ஆண்டவன் வழியில் அயர்ந்திட சோர்ந்து வலிமை இழக்கின்றார்
    சிலுவை சுமந்து உதவிட சீமோன் வந்தாரே 2
    6 கனிவே இல்லா யூதர்கள் புனிதன் உடலை வதைத்தனர்
    துணிவே உருவாம் வெரோனிக்கா நின் முகம் துடைத்தாளோ 2
    7. பரமன் பாதம் நடுங்குது பசியால் உடலும் வாடுது
    பாவ சுமைகள் நிறைந்ததால் மீண்டும் விழுந்தாயோ 2

    8 எருசலேமின் பெண்களும் இயேசுவை கண்டு அழுதாரே எனக்காய் அல்ல உங்களுக்காய் அழுங்கலள் என்றாயோ 2
    9. சுமை சுமந்து களாத்தோரை
    அழைத்துக் கொடுத்தீர் இளைப்பாற்றி
    சிலுவை சுமையின் பாரத்தால் மண்மீது விழுந்தாயோ
    10 அகிலம் முழுவதும் உமதன்றோ அனைத்தும் உமது படை பன்றோ ஆடை கூட இல்லாமல் நிற்கின்ற நிலை ஏனோ
    11 உலகின் பாவம் போக்கவே உன்னதன் சிலுவை சுமந்தரே கள்ளமில்லா கர்த்தரை ஆணியால் அறைந்தாரே..2
    12முள்முடி தாங்கிய இறைமகன் கள்வர்கள் நடுவே உயிர் விட்டார் சிலுவை தனிலே செம்மறியாய் என்யேசு பலியானார்..2
    13 விண்ணவர் மண்ணில் உயிர் விட்டார் மன்னவர் மீட்பு அடையவே தன் மகனை மடியில் கிடத்தியே
    அன்னையே அழுதாயோ..2
    14 உலகில் ஒளியாய் வந்தவர் உலகம் வாழ தன்னை தந்தார்
    மீண்டும் உயிர்த்து எழுந்திட கல்லறை அடைந்தார் 2
    15 தந்தை உலகை அன்பு செய்தார் தனது மகனைப் பலி தந்தார் சிலுவை மரத்தில் செம்மறியின் அன்பை கண்டோமா. 2

    ReplyDelete
  9. மீட்க வந்த இறைமகன் மீட்பின் பயணம் போகின்றார்
    என் தேவன் இயேசுவின் மீட்புப் பாதை சிலுவைப்பாதையே சிலுவைப் பாதையே

    1 உன்னை வெறுத்த பரபாசை உவந்து ஏற்றுக் கொண்டனர் சிலுவை ஏற்று அதன் வழி மீட்க வந்தாயோ 2
    2தோளில் சிலுவை ஏற்கின்றார் துணிந்து கல்வாரி செல்கின்றார் மீட்கவே பழியை சுமந்தாயோ 2

    3 பாரச்சிலுவை அழுத்தவே பரமன் கீழே விழுகின்றார் கண்ணீர் துன்பம் துடைத்து நீர் மண் மீது சாய்ந்தாயோ
    4 அன்பு மகனை அன்னை மரி துன்ப நிலையில் காண்கின்றாள்
    மகனின் கோலம் கண்டதும் மரியே அழுதாயோ. 2
    5 ஆண்டவன் வழியில் அயர்ந்திட சோர்ந்து வலிமை இழக்கின்றார்
    சிலுவை சுமந்து உதவிட சீமோன் வந்தாரே 2
    6 கனிவே இல்லா யூதர்கள் புனிதன் உடலை வதைத்தனர்
    துணிவே உருவாம் வெரோனிக்கா நின் முகம் துடைத்தாளோ 2
    7. பரமன் பாதம் நடுங்குது பசியால் உடலும் வாடுது
    பாவ சுமைகள் நிறைந்ததால் மீண்டும் விழுந்தாயோ 2

    8 எருசலேமின் பெண்களும் இயேசுவை கண்டு அழுதாரே எனக்காய் அல்ல உங்களுக்காய் அழுங்கலள் என்றாயோ 2
    9. சுமை சுமந்து களாத்தோரை
    அழைத்துக் கொடுத்தீர் இளைப்பாற்றி
    சிலுவை சுமையின் பாரத்தால் மண்மீது விழுந்தாயோ
    10 அகிலம் முழுவதும் உமதன்றோ அனைத்தும் உமது படை பன்றோ ஆடை கூட இல்லாமல் நிற்கின்ற நிலை ஏனோ
    11 உலகின் பாவம் போக்கவே உன்னதன் சிலுவை சுமந்தரே கள்ளமில்லா கர்த்தரை ஆணியால் அறைந்தாரே..2
    12முள்முடி தாங்கிய இறைமகன் கள்வர்கள் நடுவே உயிர் விட்டார் சிலுவை தனிலே செம்மறியாய் என்யேசு பலியானார்..2
    13 விண்ணவர் மண்ணில் உயிர் விட்டார் மன்னவர் மீட்பு அடையவே தன் மகனை மடியில் கிடத்தியே
    அன்னையே அழுதாயோ..2
    14 உலகில் ஒளியாய் வந்தவர் உலகம் வாழ தன்னை தந்தார்
    மீண்டும் உயிர்த்து எழுந்திட கல்லறை அடைந்தார் 2
    15 தந்தை உலகை அன்பு செய்தார் தனது மகனைப் பலி தந்தார் சிலுவை மரத்தில் செம்மறியின் அன்பை கண்டோமா. 2

    ReplyDelete
    Replies
    1. Hi Thomas,
      Do you have the audio (MP3) or the notations for this song (மீட்க வந்த இறைமகன்)? If so can you please send me? Thanks.

      Delete
  10. @Michael Stanley, please share me the keyboard track for the songs if possible. I want to play at our church

    ReplyDelete
  11. Please send the audio of the way of cross. Thank you.

    ReplyDelete
  12. எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
    எனக்காய் சிலுவையைச் சுமக்கும் தெய்வமே (2)

    1. குற்றம் எதுவும் இல்லா தேவனே
    எம் குறையைத் தீர்க்கவே மரணம் ஏற்றீரே
    பிறர் சுமத்தும் குற்றத்தைச் சுமக்க அருள் தாரும்

    2. பாரச் சிலுவையோ எம் பாவச் சிலுவையோ
    நீர் சுமந்தது எம்பாவச் சிலுவையோ
    உன் உள்ளம் உடைந்ததோ எம்பாவ வாழ்க்கையால்

    3. உலகின் பாவமோ சிலுவை வடிவிலே
    நீர் தோளில் சுமக்கவே தளர்ந்து வீழ்ந்தீரே
    எம் பாவச் சுமையினால் உன் உள்ளம் உடைந்ததோ

    4. உடலோ இரத்தத்தால் உருவில்லாமலே
    எதிர் கொண்டாள் அன்னை ஏதும் பேசாமல்
    அவர் உள்ளம் துடித்ததோ அன்பு தாயின் வருகையால்

    5. மனித வாழ்க்கையை உயர்த்தும் சிலுவையை
    மறுக்க முடியாமல் சீமோன் வருந்தி சுமந்தாரே
    பிறரன்பு பணியிலே நிலைக்க அருள் செய்வீர்

    6. துகள் படிந்த உம் திருமுகத்தையே
    துணிந்த வெரோணிக்காள் துடைக்க வந்தாளே
    நிலையாய் பதிந்ததோ உம் வதனம் துணியில்

    7. புழுதி வீழ்ந்து எம் பாவ பளுவினால்
    நீர் மீண்டும் எழுந்தது எம்மை மீட்கவே
    உன் உள்ளம் உடைந்ததோ என் பாவ வாழ்க்கையால்

    8. வருந்தும் மகளிருக்கு மொழி நீர் நல்கினீர்
    பாவிகள் நாங்களும் வருந்த வரம் தா
    பொங்கும் கடல் போல உம் அன்பை அறிவாரோ

    9. மூன்றாம் முறையாக நிலத்தில் வீழ்ந்தீரே
    கால் ஊன்றி நடந்திடும் நிலையும் தளர்ந்தீரே
    என் அன்பு தேவனே எம் வாழ்வை மீட்கவா

    10 உடைகள் களைந்திட உம்மைக் கொடுத்தீரே
    மடைதிறக்கும் வெள்ளம் போல் உதிரம் சொரிந்தீரே
    யாம் தூய்மையில் வாழ எமக்கு அருள்தாரும்


    11. மூன்று ஆணிகள் உம்மைத் துளைக்கவே
    மீளாத் துயரினில் நீர் நொந்து வருந்தினீர்
    உதிரம் வடிந்ததால் உம்மை ஈந்தீரே

    12. இன்னுயிர் அகன்றது இருளில் ஆழ்ந்தது
    இயற்கை சீற்றமும் மரணம் அறிவித்தது
    உம் அன்பாம் உயிரையே எமக்காய் ஈந்தீரே

    13. துயருற்றுத் துடிக்க உள்ளம் நைந்திட
    ஊயிரற்ற உடலை அன்னை சுமந்திட
    ஆறாத் துயரினால் உம் அன்னை வருந்தினாள்

    14. ஒடுங்கிய உடலோ துணியால் பொதிந்திட
    நீ அடங்கிய கல்லறை உமக்குச் சொந்தமல்ல
    எம்பாவ செயல்களை அடக்க வரம் தாரும்


    ReplyDelete
  13. மனம் வருந்தி நீ வருவாயா
    மனம் திருந்தி நீ வருவாயா
    கல்வாரி நோக்கி கால்களைக் கடித்து
    கருணை தேவனை பின்தொடர - மனம் வருந்தி

    1. பழிகளைச் சுமத்தினரே பாவிகள் ஒன்றுசேர்ந்து
    சிலுவை சாவினையே சுமத்தி இகழ்ந்தனரே - (அன்று) -2

    2. கொடிய சிலுவையினை தோள்மேல் வைத்தனரே
    கல்வாரி மலையினுக்கு இழுத்து சென்றனரே - (அங்கு) -2

    3. சிலுவையின் பளுவாலே விழுந்தார் தரையினிலே
    துணிவாய் எழுந்து நின்று தொடர்ந்தார் பயணத்தையே-அவர் -2

    4 அன்னையின் கண்களிலே அழுகையின் நீர்த்துளிகள்
    உள்ளம் நொந்தாரே இறைசித்தம் உணர்ந்தாரே - (அன்று) -2

    5 இயேசுவின் துன்பத்திலே இணைந்தார் சீமோனும்
    சிலுவை சுமந்ததனால் சிந்தையில் நின்றாரே - (நம்) -2

    6 துணியுடன் ஓடிவந்தாள் துணிவான மங்கை அவள்
    துயரத்தைத் துடைத்தாளே முகத்தைப் பெற்றாளே - (தூய) -2

    7 உடல் பலம் நீங்கியதால் விழுந்தார் மறுமுறையும்
    தடுமாறி எழுகின்றார் பயணத்தைத் தொடர்கின்றார் - (தன்) -2

    8 மங்கையர் கூட்டம் அங்கே மனம் நொந்து அழுகின்றார்
    எனக்காக அழவேண்டாம் ஆறுதல் மொழிந்தாரே - (இயேசு) -2

    9 மூன்றாம் முறையாக சோர்ந்து விழுந்தாரே
    மனிதரை மீட்டிடவே முயன்றே எழுகின்றார் - (இயேசு) -2

    10 உடைகளைப் பறித்திடவே சீட்டுப் போட்டனரே
    ஆடையைப் பிடுங்கிடவே தசையைக் கிழித்தனரே - (அவன்) -2

    11 கூரிய ஆணிகளால் சிலுவையில் அறைந்தனரே
    கள்வர்கள் நடுவினிலே கொடுமையாய் நிறுத்தினரே - (அன்று) -2

    12 அனைத்தும் முடிந்ததென்று கண்களை மூடுகின்றார்
    தன்னை அர்ப்பணித்து இறைசித்தம் முடிக்கின்றார் - (அந்தோ) -2

    13 தாயின் மடியினிலே சாய்ந்தார் சரமாக
    ஐய்யோ துடிக்கின்றார் கண்ணீர் வடிக்கின்றார் - (அன்னை) -2

    14 மானிட மைந்தனுக்கோ தலைசாய்க்க இடமுமில்லை
    மாற்றான் கல்லறையில் அடக்கம் செய்தனரே -2

    ReplyDelete
  14. Hello sir am conducting way of the cross in my village Villupuram district I need full song of engey sumanthu pogireer song please sir send it to my mail or my whatsapp number francisamul89@gmail.com (9042149066)

    ReplyDelete
  15. எங்கே சுமந்து போகீறீர்?
    சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர்
    பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க
    எங்கே போகிறீர்

    1. மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று
    தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி
    எங்கே போகிறீர்

    2. பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி
    பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து
    எங்கே போகிறீர்

    3. கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து
    எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து
    எங்கே போகின்றீர்

    4. மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு
    மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த
    எங்கே போகிறீர்

    5. உதிரம் ஆறாய் சிந்தி, உள்ள உரமிழந்து
    சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து
    எங்கே போகிறீர்

    6. கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி
    உத்தமி வெராணிக்கம்மாள், வெண் துகிலால் துடைத்தும்
    எங்கே போகிறீர்

    7. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே
    மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
    எங்கே போகிறீர்

    8. புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை
    ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து
    எங்கே போகிறீர்

    9. சிலுவை பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன்
    மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும்
    எங்கே போகிறீர்

    10. நீடாடை கழற்றவே, கோடாகோடிக் காயங்கள்
    இரத்தம் ஆறாய் பெருகி, வேதனையால் வருந்தி
    எங்கே போகிறீர்

    11. நீட்டிய கால் கரத்தில், நீண்ட இரும்பாணிகள்
    நிஷ்ட யூதர் அறைந்தும், நேசத்திலே வெந்து
    பலி-யாகினீர்

    12. சிலுவை பீடமேறி, மும்மணி நேரந் தொங்கி
    அரிய பிதாவை வேண்டி, ஆருயிர் ஒப்படைத்து
    பலி-யாகினீர்

    13. மரி தாய் மடிமீதில், மரித்த மகன் தாங்கி
    ஏழு சோக வாட்களால், ஊடுருவி வருந்தி
    தாயே நின்றீர்

    14. கர்த்தரின் உடல்தனை, கல்லறைக்குள் அடக்கி
    உத்தானம் ஜீவனுமாய், உயிருடன் எழுந்து
    எப்போ வருவீர்

    ReplyDelete
  16. I need Manika vendumea iraiva manika vendumea song lyrics

    ReplyDelete