Tuesday, 9 April 2013

என் இயேசுவே உன்னை நான் | En Yesuvae Unai Naan

என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்.!
எந்நாளும் உன் அருளை நான்
பாடி மகிழ்ந்திருப்பேன்
என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்!

உன் நாமம்  என் வாயில்
நல் தேனாய் இனிக்கின்றது 
உன் வாழ்வு என் நெஞ்சில் - நல்
செய்தியாய் ஜொலிக்கிறது
உன் அன்பை நாளும் எண்ணும் போது
ஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே

உன் நெஞ்சின் கனவுகளை
நிறைவேற்ற நான் உழைப்பேன்
உறவாகும் பாலங்களை
உலகெங்கும் நான் அமைப்பேன்
இறையாட்சி மலரும் காலம் வரையில்
இனிதாய் எனை அளிப்பேன்  -என் இயேசுவே

4 comments:

  1. என் இயேசுவே என் இயேசுவே

    ReplyDelete
  2. மிக மிக அருமையான பாடல்

    ReplyDelete
  3. எல்லாம் என் ஆண்டவர்

    ReplyDelete
    Replies
    1. எனது உயிர் இயேசு ♥️
      எனது உயிர் கர்த்தர் ♥️♥️

      Delete