Sunday, 28 April 2013

என்னோடு நீ பேச வந்தாய் | Ennodu Nee Paesa Vanthai

என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்
என் தெய்வமே - 2 நீயின்றி நானில்லையே
உன் நினைவின்றி வாழ்வில்லையே

இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்
தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்

உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன் போக வா
கண் போலவே எனைக் காக்க வா
ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே

3 comments:

  1. Spiritually touching & melodious hymn as though God is communicating with us personally.

    ReplyDelete
  2. அருமையான திருவிருந்துப் பாடல்.நாம் ஒவ்வொரு முறை திருவிருந்தினை உட்கொள்ளும் போதும், இறைவன் நம்முள் வருகிறார் என்கிற உணர்வு நமக்கு வர வேண்டும். அத்தகைய உணர்வு கொண்டோருக்கு மிகவும் ஏற்புடையதாக அமைக்கப்பட்ட பாடல் இது.

    ReplyDelete