Sunday, 28 April 2013

வண்ண வண்ண லீலிமலர் | Vanna Vanna LeeliMalar

அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2


வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2
தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2  

அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2
வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே - 2

தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2
வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே - 2 

3 comments: