ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன்
அருட்பதம் நாடி வந்தேன்
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய் -2
சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே -2
உன்னைத்தான் நம்பித்தான் உலகதை உனக்களித்தான்
தேவன் வியந்தான், மகிழ்ந்தான் உன் பெருமை எண்ணித்தான்
-ஆரோக்கியத் தாயே
உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு
வெள்ளம்போலே அருள் தந்தாளும் தாரகையே -2
எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நினைவாய் என் வாழ்வில் வருவாய் -ஆரோக்கியத் தாயே
super song
ReplyDeleteSuper song
ReplyDelete