Wednesday, 9 October 2013

Kadakulam St. Rajakanni Matha Church Annual Feast 2013 | கடகுளம் புனித ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா 2013

                        
                            தூத்துக்குடி மறை மாவட்டம், கடகுளம் புனித ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா 04/10/2013 வெள்ளிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது. அருட்தந்தை ரா. இருதயராஜ் அவர்கள் கொடியேற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்கள். ஊர் பொது மக்கள் மற்றும் புனித ராஜகன்னி அன்னையின் பக்தர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

                           இவ்விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் வரை (13/10/2013) நடைபெறும். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை திருப்பலியும், மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும்  நடைபெறுகிறது.

                         நவ நாட்களின் ஒவ்வொரு நாளையும் ஊரின் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், திரு இருதய சபையினர், மரியாயின் சேனை சபையினர், திருக்குடும்ப சபையினர், புனித அந்தோணியார் இளைஞர் சபையினர், புனித அமலோற்பவ அன்னை சபையினர், பாலர் சபையினர், அன்பியங்கள் மற்றும் வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் ஆகியோர் சிறப்பிக்கின்றனர்

                        8-ம் திருவிழா அன்று காலை திருப்பலி மற்றும் மாலை நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.

                      9-ம் திருவிழா அன்று காலை சிறப்புத் திருப்பலி மற்றும் மாலை புனித ராஜகன்னி அன்னையின் திருத்தேர்ப் பவனி நடைபெறும். அதனைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனை நடைபெறும்.

                       10-ம் திருவிழா அன்று காலை ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். திருப்பலியில் ஊர் சிறுவர்களுக்கு புது நன்மை கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுத்தல் நடைபெறும். அதன் பின்பு ஊர் நுழைவு வாயில் திறப்பு விழா நடைபெறும். மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாலையில் அன்னையின் திருத்தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது

                     14/10/2013 திங்கள்கிழமையன்று  ஊர் நிர்வாகிகள் சார்பில் மதியம் ஊர் பொது அசனம் நடைபெறுகின்றது.

                      15/10/2013 செவ்வாய்கிழமையன்று புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பாக ஊர் பொது அசனம் நடைபெறுகின்றது.

புனித ராஜகன்னி அன்னையின் பக்தர்கள் அனைவரையும் வந்து அன்னையின் சிறப்பு ஆசீர் பெற்றுச் செல்ல உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

 கொடியேற்ற நிகழ்வு புகைப்படங்கள்: