1. படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் | Padaippu Ellam Umakkae Sontham
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே - 2
இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் - 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் - 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே - 2
இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் - 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே - 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் - 2
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2. பலிபீடத்தில் வைத்தேன் என்னை | Pali Beedatthil Vaithaen Ennai
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - 2
நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
நித்தம் வழிநடத்தும் - 2
வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் - 2
வாருமய்யா வந்து என்னை - 2
வல்லமையால் நிரப்பும் - 2
பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2
பரிசுத்தமாக்கி விடும் - 2
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3. காணிக்கை தந்தோம் கர்த்தாவே | Kanikkai Thanthom Karthavae
காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே
நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்
இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் இறைவனின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது
ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப்போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே
காணிக்கை தான் செலுத்த வந்தோம்
கருணை கிடைக்கட்டும்
தேவன் தந்த ஜீவன் எல்லாம்
புனிதம் அடையட்டும்
என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்
ஏனென்று கேளும் இறைவனின் மகனே
எம்மையே காணிக்கை தந்தோமே
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4. அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் | Anbodu Vanthom Kanikkai Thanthom
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே
உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே -2
பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் -2
புதிரான வாழ்வே எதிரானதாலே -2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே
உம் அருளோடு அணைப்பாய் மாபரனே
அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் -2
திரியாகக் கருகி மெழுகாக உருகி -2
பலியாக வைத்தோம் ஆண்டவனே
புது ஒளியாக மாற்றும் தூயவனே
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
5. இதய காணிக்கை இறவாத காணிக்கை | Ithaya Kanikkai Iravatha Kanikkai
இதய காணிக்கை இறவாத காணிக்கை
இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை -2
இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2
மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே
உன் அருளுக்குச் சான்றாகுமே -2
இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா -2 --இதய காணிக்கை
எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே
நல்வாழ்வு அதன் பரிசாகுமே -2
கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை
நேசிக்கும் நல் உள்ளம் தா -2 --இதய காணிக்கை
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
6. அர்ப்பண மலராய் வந்தேன்| Arpana Malarai Vanthaen
அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ச்சனை ஆக்கினேன் என்னை - 2
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் - 2
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் - அந்த
ஜோதியில் நிறைவு கொள்வேன் - 2
கோதுமை மணியாய் மடிந்து - என்னை
வெண்ணிற அப்பமாய் தந்தேன் - 2
என்னுடல் உன்னுடலாகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் - புவி
அதிபதி உன் திட்டம் மறந்தேன் - 2
மதியில்லாதவன் ஆனாலும் கதியிழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய் நான் ஜதியுடன் பாட்டிசைப்பேன்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
7. அன்பின் பலியாய் ஏற்பாய் | Anbin Paliyai Yerpai
அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்
புண்படும் மனதின் துயர் தணிப்பாய் - எமைப் - 2
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்
வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் - 2
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - 2 - எமைத்
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்
படைப்பின் மீதே பரிவிருக்க - அந்தப்
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க - 2
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க - 2 - உனில்
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
8. எல்லாம் தருகின்றேன் தந்தாய் | Ellam Tharugintren Thanthaai
எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் - 2
இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உனக்கு காணிக்கை - 2
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2
பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன் - 2
பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய் - 2
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
9. உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள் | Ulaikkum Karangal Padaikkum Valangal
உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்
அப்பமாய் கொண்டு வந்தோம்
சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர்
கிண்ணத்தில் தருகின்றோம் (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்
கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே
பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2) --ஏற்றிடுவீர் தந்தாய்
அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே
தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2) --ஏற்றிடுவீர் தந்தாய்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
10. காணிக்கையாக வந்தேன் | Kanikkaiyaga Vanthaen
காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்
படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்
குயவன் நீயே களிமண் நானல்லவா
குன்றாத உனது மகிமை நான் சொல்லவா
இறைவனே ஆகட்டும் உன் உளமே
அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்
அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் - 2
எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்
வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்
உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக
சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன
காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன - 2
எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக
உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்
உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
11. என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் | Ennai Thanthaen Ellam Thanthaen
என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
என் வாழ்வைப் பலியாக்கவே
உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்
பிறரன்பு பணி செய்யவே
என் இயேசுவே என் ஜீவனே
உம்மோடு உறவாடவே --2
புகழோடு நான் வாழவில்லை உம்
புகழொன்றே எனக்குப் போதும்
அருள் வாழ்வினில் நான் வளர – உம்
அன்பொன்று எனக்குப் போதும்
உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்
உறவொன்று எனக்குப் போதும்
மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்
கரமொன்றே எனைத் தேற்றிடும்
அயலாரிலே உம்மைக் காண
என்னை நான் பலியாக்கினேன்
ஆண்டவரே உம்மை அடைய
என்னை நான் தியாகம் செய்தேன்
உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட
என்னை நான் அர்ப்பணித்தேன்
நற்செய்தி பணியை நாளும் செய்ய
நாதனே என்னைத் தந்தேன்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
12. காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய் | Kanikkai Thanthom Kanivai Yerpai
காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காலத்தைக் கடந்தவா இறைவா
எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா --2
கண்ணீரிலும் செந்நீரிலும்
மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா (2) --2
காயமும் குருதியும் நிதம் காணும் --2
எம் உறவுகளைத் தருகின்றோம்
ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்
துன்பங்களில் வாடுகின்ற
நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா (2) --2
நியாயமும் நீதியும் இனி நிலவ --2
எம் நிலைகளையே ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
13. காணிக்கை தர நான் வருகின்றேன் | Kanikkai Thara Naan Varugintren
காணிக்கை தர நான் வருகின்றேன்
உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் (2)
என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்
என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)
என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்
என்னையே முழுவதும் தருகின்றேன் (2)
சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்
உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை
பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
14. காணிக்கை தர வந்தோம் | Kanikkai Thara Vanthom
காணிக்கை தர வந்தோம் உன் மலரடி
பாதங்கள் வணங்க வந்தோம் (2)
வரங்களைப் பொழியும் நாயகனே – எம்
கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்
உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்
இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்
சந்தன மலர்களை எடுத்து வந்தோம்
தீபங்கள் ஏந்தி திருமுன் ஏற்ற கூடி வருகின்றோம் (2)
உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி எம்மையே தருகின்றோம்
கோதுமை கதிர்மணி போல் இணைந்து
எம் வாழ்வினைக் காணிக்கை ஆக்க வந்தோம்
நாவினால் உந்தன் புகழினைப் பாட மேடை வருகின்றோம் (2)
வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற எம்மையே தருகின்றோம்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
15. அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே | Arpanithaen Ennaiyae Yesuvae
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே -உம்
அன்புப்பலிப் பீடத்திலே தியாகமாகுவேன் --2
உன் பாதையிலே பயணமாகுவேன்
உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்
உள்ளங்கள் உயர்ந்துவாழ உம்மோடு பாடுபட
என்னை எந்நாளும் அளிக்கின்றேன் --2
இதய உணர்வுகள் இன்ப ராகங்கள் --2
எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்
வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில்
வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் --2
வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து --2
தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமாகுவேன்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
16. தந்திட வருகின்றேன் நிறைவாய் | Thanthida Varugintren Niraivai
தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2
இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா
எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2
இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2
வரம் தருவாய் இறைமகனே
என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2
உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2
வரம் தருவாய் இறைமகனே
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
17. படைத்ததெல்லாம் தரவந்தோம் | Padaithathellam Thara Vanthom
படைத்ததெல்லாம் தரவந்தோம்
பரம் பொருளே உம் திருவடியில் --2
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
என் வாழ்வினிலே ஒளி வீசும்
உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே --2
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் --2
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் தருகின்றோம் --2
வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே --2
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் --2
கனிவாய் உவந்து தருகின்றோம் தருகின்றோம் --2
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
18. அடியோர் யாம் தரும் காணிக்கையை | Adiyor Yaam Tharum Kanikkaiyai
அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே
பாவியென்றெம்மைப் பாராமல் - யாம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் --2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் --2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்
வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு - பின்
வாழ்வினில் எமக்கென்று எது உண்டு --2
என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ
எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
19. எதை நான் தருவேன் இறைவா| Ethai Naan Tharuvaen Iraiva
எதை நான் தருவேன் இறைவா - உன்
இதயத்தின் அன்பிற்கீடாக
எதை நான் தருவேன் இறைவா
குறை நான் செய்தேன் இறைவா - பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா
கறையாம் பாவத்தை நீக்கிடவே - நீ
கல்வாரி மலையில் இறந்தாயோ
பாவம் என்றொரு விஷத்தால் - நான்
பாதகம் செய்தேன் இறைவா
தேவனே உன் திருப்பாடுகளால் - என்னைத்
தேற்றிடவோ நீ இறந்தாயோ
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
20. காணிக்கை தரும் நேரம் | Kanikkai Tharum Neram
காணிக்கை தரும் நேரம்- நான்
என் மனம் தருகின்றேன்-2
ஏற்றருளும் தெய்வமே
எளியவன் தருகின்ற காணிக்கையை-2
படைப்புக்கள் பலவாகினும்
பரமன் உமக்கே சொந்தம் -2-அதில்
மலராகும் என் மனம் உன்னிடத்திலே-2
மணம் காண ஏற்றிடுமே-2
பிறரன்பு பணிகளெல்லாம்
தலைவன் உமதன்றோ-2- என்றும்
உமதன்புப் பலியினில் என் வாழ்வினை-2
பலியாக ஏற்றிடுமே-2
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||