Pages

Sunday, 28 April 2013

வாழ்வது நானல்ல | Vazhvathu Naanalla

வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் - 2

இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் - 2
அன்பும் அருளும் பொழிகின்றார் - 2
என்னை முழுவதும் ஆள்கின்றார்

உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே - 2
யாழும் இசையும் போலவே - 2 
வாழும் இறையில் ஒன்றிப்போம்

கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே - 2
கிறிஸ்து நம்முள் வாழவே - 2

நமக்கு பயமே இல்லையே 

நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம் | Nee illatha Ullam Oor Palaivanam




நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம்   (2)
 

இறைவா இறைவா இறைவா இறைவா

மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன்  (2)
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ  (2) -இறைவா

கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே   (2)
எதனாலும் நிறையாத வெறுமையிது - உன்
அருளின்றி துயிலாத இதயம் இது   (2) -இறைவா 

நானே வானின்று இறங்கி வந்த | Naanae Vaaninintru Irangi Vantha

நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான்  (2)

எனது உணவை உண்ணும் எவரும்
பசியை அறிந்திடார்   (2)  -என்றும்
எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

அழிந்து போகும் உணவிற்காக
உழைத்திட வேண்டாம்  (2) -என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்


செம்மறியின் விருந்துக்கு | Semmariyin Virunthukku



செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2
உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் - 2
உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய்

வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே
வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே - 2
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே
இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே - 2
மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே - 2
மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே 

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே | Sumai Sumanthu Sornthirupporae

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்
இளைப்பாற்றி கொடுக்கின்றார் 

இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் - 2
இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்

வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் - 2
வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்
   
துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் - 2
அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்

வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே
வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன்

கிறிஸ்துவின் சரீரமிது | Christhuvin Sareeramithu

கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது - இந்த
உணவையே உண்போம் ஓருடலாவோம் 

ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் - 2

கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது - 2
அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது - 2

மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் - 2
மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் - 2

உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது - 2
உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது - 2 

ஒருதரம் ஒரே தரம் | Oru Tharam Ore Tharam

ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்
இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் - 2
முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர
மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர - 2

இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம்
பின்பு பிரிந்து திரிந்த காலம் - 2
இனியொரு தரம் இறைவனின் கரம்
விலகிடின் என்ன சுகம் சொல் மனமே - 2

உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி
அதை மறுப்போர் இல்லை உறுதி - 2
தினம் அவர் தரும் உறவினில் வரும்
சுகமோ என்ன சுகம் என் மனமே - 2 

எனில் வாரும் என் இயேசுவே | Enil Varum En Yesuvae

எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே
நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே
என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
 

என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே

பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே தேவா

என் தேடல் நீ என் தெய்வமே | En Thedal Nee En Thaivamae

என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2
 

இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2


ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா

உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா

என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி | En Aayan Yesu En Ullam Thedi

என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது - 2
என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன் - 2

பசியால் வாடும் ஏழையின் நிலையில்
பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி
அருளமுதை ஈந்தார் - 2

ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்
அணைத்திடவே வந்தார்
ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை
மாற்றிடவே வந்தார் - 2

நண்பனுக்காய் தரும் உயிர்த் தியாகம் மிஞ்சும்
நட்பெதுவும் உளதோ
என் அன்பர் இயேசு சிலுவையில் மரித்து
எனைக் காத்தார் என் சொல்லவோ - 2 

எந்தன் இதய கானம் | Enthan Ithaya Ganam

எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்
இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும் - 2

காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்
சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்
மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்
மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்
நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்
நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்
எல்லாம் உன் புகழ்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே

தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்
தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்
கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்
பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்
நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்
நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள் எல்லாம்

உன்னில் நான் ஒன்றாக | Unnil Naan Ontaga

உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
என்னில் வா என் மன்னவா - 3

நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா - 2
எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
இணைகின்ற என் மன்னவா - 2

முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா - 2
இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண
எனைத் தேர்ந்த என் மன்னவா - 2 

இறைவன் அழைக்கின்றார் | Iraivan Azhaikkintar

இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு
இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் - 2

பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி - 2
பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே - 2

அப்பத்தை கையெடுத்துஅன்புடனே கொடுத்து - 2
இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் - 2

இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் - 2
எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே - 2

ஆனந்த மழையில் நானிலம் மகிழ | Ananda Mazhaiyil Nanilam Mahizha

ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் - 2
ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ

மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான்
விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் - 2
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே
பண்பாடவோ என்றும் கொண்டாவோ
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே
காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே - 2
எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்

மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3


அன்பே என்றானவா | Anbae Entranava

அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா
உன் மேன்மை வானம் என்றாகினாலும்
என் ஏழ்மை குறை தீர்த்தவா - 2

வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்
வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்
பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்
எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய்
மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் - 2
என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் - 2

உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன்
உன் நெஞ்சமலராலே எனை மூடினாய்
கண் பார்வை அருள் போதும் என நாடினேன்
என் பாதை வழி செல்லும் துணையாகினாய்
மண்மீது காலூன்றும் தொடுவானமாய் - 2
என்மீது நீ வந்து நானாகிறாய் - 2 

அமைதி தேடி அலையும் நெஞ்சமே | Amaithi Thaedi Alaiyum Nenjamae

அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
அவரின்றி வேறில்லையே

போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்
என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2
காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து
அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2

இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்
நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2
பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2 

அமைதியின் தெய்வமே இறைவா | Amaithiyin Thaivamae Iraiva

அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே
அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி  (2)

நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி
தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி  (2)
அன்பு மொழியை விதைத்திடுவோர்
அருளின் பயிரை அறுத்திடுவார்  (2) -அமைதி

உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி
உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம்   (2) -அமைதி

அஞ்சாதே நான் என்றும் உன்னோடு | Anjathae Naan Entrum Unnodu

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2

குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் - 2
என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2

அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ - 2
அன்னை உன்னை மறந்தாலும்
உன்னை நானோ மறவேனே அஞ்சாதே


என்னுயிரே கலக்கம் கொள்ளாதே | Ennuyirae Kalakkam Kollathae

என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் - 2

கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்
கரையாத அவரன்பு குறையாது - 2
கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2
தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2

உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்
உலகாளும் மன்னவன் உனக்குண்டு - 2
என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் - 2

உன்னை நம்பி வாழும் போது | Unnai Nambi Vazhum Pothu

உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்
உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்
உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்
இறைவா இறைவா அமைதி காண்கிறேன்
நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்
எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் - 2
என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் - 2
இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன்
எளிதாய் கடப்பேன் நான் எளிதாய் கடப்பேன்

இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே
இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே
உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன் - 2
உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்
என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன்

கருணை உன் வடிவல்லவா | Karunai Un Vadivallava

கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா
கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா
கருணை உன் வடிவல்லவா
வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்
கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்
எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா

வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்
மனதீபம் நீ என்று அறியாமலே
அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்
அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2
தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன்
உணராத நிலை மாற்றுவாயோ
உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்
ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்
மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்

செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்
புவிமீது இசைஞானம் இழிவாகுமே
சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்
புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2
உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை
உண்டாக்கி அருள் வீசுவாயோ
தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்
இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்
நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்

என் உள்ளம் கவியொன்று பாடும் | En Ullam Kavi Ontru Paadum

என் உள்ளம் கவியொன்று பாடும் - உந்தன்
அன்பொன்றே அது என்றும் நாடும் - 2
இன்பங்கள் நதியான வெள்ளம்
இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்
ஆனந்த கவிபாடித் துள்ளும் - 2

உன்னோடு ஒன்றாகும் நேரம்
உலகங்கள் சிறிதாகிப் போகும் - 2
நான் என்பதெல்லாமே மாறும்
பிறர் சேவை உனதாக ஆகும்
எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் - 2
அன்போன்றே ஆதாரமாகும்
விண் இன்று மண் மீது தோன்றும்

பிறர் காணும் இன்பங்கள் எங்கள்
இதயத்தை இசை மீட்டிச் செல்லும் - 2
வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்
உறவென்னில் உயிர் வாழத்தானே
என் சாயல் அன்று உன் சாயல் இன்று - 2
உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று
என்றாகும் நன்னாளும் தோன்றும்

என்னோடு நீ பேச வந்தாய் | Ennodu Nee Paesa Vanthai

என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்
என் தெய்வமே - 2 நீயின்றி நானில்லையே
உன் நினைவின்றி வாழ்வில்லையே

இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்
தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்

உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன் போக வா
கண் போலவே எனைக் காக்க வா
ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே

என் சுவாசக் காற்றே | En Suvasa Katre

என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்

என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய் 



எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் | Enthan Jebavelai Umaithedi Vanthaen

எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே - 2
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடிவந்தேன் - 2


சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயைவேண்டி உம் பாதம் வந்தேன் - 2

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையைக்
கேட்டிடக் காத்திருப்பேனே - 2 

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் | Nilavum Thoongum Malarum Thoongum

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்
கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்
இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்
உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே
உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே
இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம்
இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் --2
கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும்
மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால்
வானத்துப் பறவையைப் பார் விதைப்பதில்லை அறுப்பதில்லை
வயல்வெளி மலர்களைப் பார் உழைப்பதில்லை நூற்பதில்லை
இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே --2

வருத்தும் சுமைகளெல்லாம் சுமந்திடக் காத்திருப்பான்
வாழ்வு தரும் வார்த்தைகளால் ஆறுதல் அளித்திடுவான் --2
நல்லவர்க்கும் தீயவர்க்கும் அருள்மழை பொழிந்திடுவான்
வாழ்வின் வைகறையில் விடியலாய் எழுந்திடுவான்
வயல்வெளி மலர்களைப் போல் வாடிவிடும் வாழ்க்கை இது
நன்னெறி வாழ்க்கை ஒன்றே கூடிவரும் செல்வமது
இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே --2


ஒருபோதும் உனைப் பிரியா | Oru Pothum Unaipiriya

ஒருபோதும் உனைப் பிரியா
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல் கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே - 2
நீங்காத நிழலாக வா இறைவா

உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் - 2
ஏன் என்னை நீ தெரிந்தாய்
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன்
தாய் உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்

நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் - 2
என்னுள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன் 

என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே | Ennoda Yesuvae Konja Neram Pesumae


என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா - 2

உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் - 2
எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் - 2

நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் - 2
திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் - 2

உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் - 2
கலங்குற என் கண்ண உன் கரமே தொடைக்க வேணும் - 2 


என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு | En Vazhvin Aadharam

என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா
எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா - 2

சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன
எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன
கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே
காலை நேரத் தென்றலாக கனிவோடு என்னில் வாருமே

மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக
எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே
நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை
எனக்குத் துணை நீயாய் இருக்க என்னைச் சூழ்ந்து அன்பே வாரும் 

என் இயேசுவே என் ஆண்டவரே | En Yesuvae En Aandavarae

என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் - 2

நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள்
உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது - 2

ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும்
என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் - 2

உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் | Unnai Thedum Enthan Ullam

உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் - என்
உள்ளத்தில் உறைந்திட வா
உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் - என்
உயிரினில் கலந்திட வா
வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே - 2

உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா
வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா - 2
நீதியும் நேர்மையும் மறைந்தாலும்
உரிமையை மனிதம் இழந்தாலும் - 2
உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா

பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா
அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா - 2
வாள்களும் போர்களும் அழித்தாலும்
வாழ்வினை வாழ்வே எரித்தாலும் - 2
வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா

இரக்கம் நிறைந்த தெய்வமே | Irakkam Niraintha Thaivamae

இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்
உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் - 2

பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்
பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்
உதயம் தேடும் மலரைப் போலவே
உயிரின் உயிரே உன்னைத் தேடினேன்
நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை
நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா
வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே

தேடும் உலக செல்வம் நிறைந்தாலும்
பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்
அலைகள் ஓயாக் கடலைப் போலவே
அன்பே உனது அருளை வேண்டினேன்
தாயில்லாக் குழந்தை போலவே
தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே
முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே
காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே

அன்பின் தேவ நற்கருணையிலே | Anbin Theva Narkarunaiyilae




அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்

அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப இரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்

கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழத் தயைபுரிவீர் 

கலைமான்கள் நீரோடை தேடும் | Kalaimaangal Neerodai Thaedum

கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்
உள்ளத்தாகம் உந்தன் மீது
கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் 

மான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்

காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2
உயிரைத் தந்திடும் கருவினிலே
அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2
குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்
கதையின் நாயகன் நான் இன்று  -கலைமான்கள்

பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2
காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2
சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால்
அழகிய மணிமாலை நானாவேன்  -கலைமான்கள் 




எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய | Ellam Umakkaka Yesuvin Thivya

எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே
எல்லாம் உமக்காக - 2

எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் - 2
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2
உந்தன் அதிமிக மகிமைக்கே

ஒளியை நோக்கா மலரில்லை
நீரை நோக்கா வேரில்லை - 2
உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் - 2
வாழ்வில்லை அதில் பயனில்லை

என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு | Ennidam Ezhuntha Yesuvae Umakku

என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
அன்பு ஆராதனை நன்றியுமென்றும் - 2

பரலோக வாசிகள் அருமையாய் உம்மை
புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த - 2
நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ
நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ

மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து
நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென - 2
ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு
பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்
சீரிய திருவுள்ளம் பிறழாது வளர - 2
இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க
நேசமாய் அருள வேண்டுகின்றோமே

நானே வானினின்று இறங்கி வந்த | Naanae Vaaninintru Irangi Vantha

நானே வானினின்று இறங்கி வந்த
உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால்
அவன் என்றுமே வாழ்வான் (2)

எனது உணவை உண்ணும் எவனும்
பசியை அறிந்திடார் (2) -என்றும்
எனது குருதி பருகும் எவரும்
தாகம் தெரிந்திடார்

அழிந்து போகும் உணவுக்காக
‌உழைத்திட வேண்டாம் (2) -என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும
உணவிற்கே உழைப்பீர்

மன்னா உண்ட முன்னோர் எல்லாம்
மடிந்து போயினர் (2) -உங்கள்
மன்னன் என்னை உண்ணும் எவரும்
மடிவதே இல்லை

என் தெய்வம் வாழும் பூமியிது | En Thaivam Vazhum Poomiyithu

என் தெய்வம் வாழும் பூமியிது
எத்துணை அழகு இது
உலகே கண்கள் திறவாயோ
உவகை இன்று காணாயோ

பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்
உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர்மனம் கூறும்
எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்
பொங்கிடும் நீரின் ஊற்றும்
மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்
மின்னலும் தன்னொளி நிலவும்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு --2
இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப்பருகு - என் தெய்வம்

நிறைந்த அன்புடை நெஞ்சம் நிலவென ஒளிதரும் அறிவும்
மலர்ந்த முகந்தனின் அழகும் மங்கா கலைகளின் வளமும்
என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்
எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்
நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குணங்கள்
நிம்மதி தேடிடும் மனங்கள்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு --2
எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப்பருகு - என் தெய்வம்

பார்வை பெற வேண்டும் | Paarvai Pera Vaendum

பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்
என் உள்ளம் உன்னொளி பெற வேண்டும்- புது
பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும்- புதுப்
பார்வை பெற வேண்டும்
நாளும் பிறக்கும் உன் வழியை -காணும்
பார்வை தர வேண்டும்

நீதி நேர்மை உணர்வுகளை- நான்
பார்க்கும் வரம் வேண்டும்
உண்மை அன்பு உயர்ந்திடவே
உழைக்கும் உறுதி தர வேண்டும்
எல்லோரும் ஒன்றாகவே வாழும் வழி வேண்டும்
நான் பார்வை பெற வேண்டும்

அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar



அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்

தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து(2)
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)

செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)
புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2)

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2)

இறைவன் என்னை காக்கின்றார் | Iraivan Ennai Kakkintar

இறைவன் என்னை காக்கின்றார்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன்

புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் நிறைந்த கானான் (2)
அழைத்து சென்று களைப்பை ஆற்றி
புத்துயிர் ஊட்டுகின்றார் (2) -இறைவன்

தீமை துன்பம் நெருங்க விடாமல்
அறனும் கோட்டையும் புகலிடமான(2)
வார்த்தை கேடயம் கவசமாக
காத்து வருகின்றார்(2)-இறைவன்

இருளும் பள்ளமும் எதிரியுமான
எரிக்கோ   யோர்தான் தடைகளை மாற்றி(2)
வாழ்வின் வழியை எனக்கு காட்டி
சீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன்

இறைவா நீ ஒரு சங்கீதம் | Iraiva Nee Oru Sangeetham

இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்
இணைந்தே பாடிடும் என் கீதம்
உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்
என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

புல்லாங்குழலென தனித்திருந்தேன் - அதில்
இசையாய் என் மனம் புகுந்திடுவாய் - 2
பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் - புதுப்
பாடலால் என்னகம் இணைந்திடுமே
எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்
எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா
காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி
வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா - 2

கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் - நீ
தோளினில் சுமந்தே வழிநடந்தாய் - 2
நாதா உன் வார்த்தைகள் வானமுதம் - 2 என்னை
நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்
தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்
தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்
அருளாளன் நீயின்றி அழகேது என்னில்
அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் - 2

இசை ஒன்று இசைக்கின்றேன் | Isai Ontru Isaikkintren

இசை ஒன்று இசைக்கின்றேன்
இறைவா எளிய நல்குரல் தனிலே - 2
என் இதயத் துடிப்புக்களோ - என்
இசையின் குரலுக்குத் தாளங்களே - 2

காலத்தின் குரல்தனில் தேவா - உன்
காலடி ஓசை கேட்கின்றது - 2
ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே

ஏழையின் வியர்வையில் இறைவா - உன்
சிலுவையின் தியாகம் தொடர்கின்றது - 2
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் | Aandavarai Naan Pottriduven

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - 2

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் - 2
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் - 2
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக - 2

ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் - 2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - 2 என்று
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று

ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே | Aandavarae En Attralai Ullavarae

ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
உமக்கே நான் அன்பு செய்கின்றேன் - 2
அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்
அவரே என் கேடயம் வலிமையும் துணையும் - 2

என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க
என் அன்பு தேவன் அடைக்கலமானார் - 2
நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்
நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்

வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே
வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே - 2
எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க
எந்நாளும் என் மீட்பர் புகழ்தனைப் பெறுக

நெஞ்சே நெஞ்சே இறைவனை | Nenjae Nenjae Iraivanai

நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு
தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு
வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார்
எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசைப் பாடிடு

நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும்
கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும்
கடலையே பிரித்துக் கடந்திட உதவினார்
கலகம் புரிந்தோரை கலங்கிடச் செய்தார்
நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே
ஊற்றழகும் உயிரழகும் இறைவனின் மாட்சியே
வாழ்வெனும் பாதையில் வீழும் வேளையில்
தாங்கிடும் தாயாய் தனைத் தந்தார்
நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

வானக அரசியே மாந்தரின் அன்னையே | Vanaga Arasiyae Mantharin Annaiyae

வானக அரசியே மாந்தரின் அன்னையே - நான்
உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன்

பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ
பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ - 2
அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய்

இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய்
காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் - 2
புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்

வணக்கம் வணக்கம் வணக்கமம்மா | Vanakkam Vanakkam Vanakkamamma

வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2

மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா - 2
நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே - 2

வேளைநகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே - 2
தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே
கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே

கத்தும் அலைகடல் ஓரத்திலே | Katthum Alaikadal Oorathilae

அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே
 
கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா - 2

வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே
உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே - 2
சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே - 2
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி - 2
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே - 2
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ 

வண்ண வண்ண லீலிமலர் | Vanna Vanna LeeliMalar

அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2


வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2
தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2  

அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2
வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே - 2

தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2
வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே - 2 

அன்னையே ஆரோக்கிய அன்னையே | Annaiyae Arokkiya Annaiyae

அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே - 2

கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் - 2
மடல்விரி தாழையும் மணமது வீசும் - 2
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்
பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய் - 2
உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம் - 2
உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்

உன் திருப்பாதம் தேடியே வந்தோம்
உன் எழில் கண்டு உள்ளத்தைத் தந்தோம் - 2
கண்ணென எம்மைக் காத்தருள்வாயே - 2
கர்த்தரின் தாயே துணை என்றும் நீயே 

அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை | Annai Un Pathathil Amarnthidum Velai

அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை
அல்லல்கள் யாவும் தீருதம்மா
என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை
பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா --2

சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது
சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் --2
பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது
படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்
தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்

நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட
நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் --2
உயிரான உறவுகள் பிரிகின்ற போது
உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்
உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்

Saturday, 27 April 2013

தாயின் மடிதான் உலகம் | Thayin Madithaan Ulagam

தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் - 2
அவள் சேயின் மடிதான் மோட்சம்
நம் சேசுவைத் தொழுதிடுவோம் - 2

பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் - 2
அவள் உள்ளம் என்றும் மகிழ
உண்மை வழியில் நாம் நடப்போம்

அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் - 2
அன்பு கருணை உருவாய்
ஆண்டவன் தந்த அரும்பொருளாம்

வங்கக் கடற்கரை யோரம் வேளாங்கண்ணியில் வாழும் - 2
தங்க நிலாவின் ஒளியால்
தாரகை சூடும் ஆரோக்கியமாதா 


Wednesday, 24 April 2013

வான்லோக ராணி வையக ராணி | Vaanloga Rani Vaiyaga Rani

வான்லோக ராணி வையக ராணி
மண்மீதிலே புனித மாது நீ - 2
விண்ணொளிர் தாரகை தாயே நீ
தண்ணொளிர் வீசிடும் ஆரணி - 2
 

பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ - 2

ஜென்ம மாசில்லா மாதரசி
செம்மைசேர் மங்கையர் ராணி நீ பாவமேது

புண்ணிய மேநிறை மாது நீ
விண்ணவர் போற்றிடும் அம்மணி பாவமேது

மாசில்லாக் கன்னியே மாதாவே | Maasilla Kanniyae Mathavae

மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார் 

வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2

மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்  (2) -வாழ்க

தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே  (2)  -வாழ்க

தேவ தாயின் மாதம் இது | Theva Thaayin Maatham Ithu

Click here to Download Deva Thaayin Maatham ithu allavo mp3 song

தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை
சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா  -- 2

பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே  -- 2
ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே   --தேவ தாயின்

தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை
சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம்  -- 2
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து --2
கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் -- தேவ தாயின்

ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே - 2
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் - 2
இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் -- தேவ தாயின்

கருணை மழையே மேரி மாதா | Karunai Mazhaiyae Mary Matha

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ   (2)


கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ   (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ  (2) -கருணை

தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே   (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே  (3)  -கருணை

அன்பான மாந்தரே கூடுங்களே | Anbana Mantharae Koodungalae

அன்பான மாந்தரே கூடுங்களே
ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே
கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே
நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே  (2)
மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே
மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே  (2)
 
முப்பொழுதும் அவள் கன்னியம்மா
எப்பொழுதும் நம் அன்னையம்மா

வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே
வேதங்கள் அறியாத தத்துவமே (2)
தேவாதி தேவனின் தாயகமே
திருமறை போற்றிடும் நாயகமே   (2)   -முப்பொழுதும்

தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே
தீமைகள் களைகின்ற அன்புத்தாயே  (2)
உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே
ஊமைகள் பேசிட மொழியும் நீயே  (2)   -முப்பொழுதும் 


அலைகடலின் ஓசையிலே | Alaikadalin Oosaiyilae

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா --2

நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே --2
அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா --2

கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் --2
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா --2

வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் --2
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் --2 

அம்மா நீ தந்த ஜெபமாலை | Amma Nee Thantha Jebamalai

அம்மா நீ தந்த ஜெபமாலை
ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்

சந்தோஷ தேவ இரகசியத்தில்
தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய்
எம் தோஷம் தீர இயேசுபிரான்
உம் அன்பு மகனானார் அவரை
காணிக்கை வேண்டி புலம்பியதும்
வீணாகவில்லை தாய்மரியே
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

துயர்நிறை தேவ இரகசியத்தில்
தூயவரின் வியாகுலங்கள் கண்டோம்
உயர் வாழ்விழந்த எமக்காக
உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை
சாட்டைகளும் கூர் முள்முடியும்
வாட்டிய சிலுவைப்பாடுகளும்
சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா
தாய் நெஞ்சம் நொறுங்கியதார் அறிவார்

மகிமையின் தேவ இரகசியத்தில்
மாதா உன் மாண்பினைக் கண்டோம்
சாகாமை கொண்ட நின் மகனார்
சாவினை வென்றெழுந்தார் அவரே
தூயாவியால் உன்னை நிரப்பியதும்
தாயுன்னை வானுக்கு எழுப்பியதும்
மூவுலகரசி ஆக்கியதும்
மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே 


ஒரு நாளும் உனை மறவேன் | Oru Naalum Unai Maravaen

ஒரு நாளும் உனை மறவேன்
தாயே ஒருநாளும் உனை மறவேன்

கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
உலகமெலாம் அறுந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்

நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்

சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும்

Monday, 22 April 2013

அம்மா அமுதினும் இனியவளே | Amma Amuthinum Iniyavalae

அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே
அகமே மகிழ்வாய் மரியே --2

தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே --2
அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்
அவனியிலே அருள்பொழிவாய்
அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

அருள்நிறை மாமரியே அமல உற்பவியே --2
கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே

அன்னையின் அருட்திரு வதனம் | Annaiyin Arulthiru Vathanam

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம்
அல்லல்கள் அகன்று விடும் - அவள்
கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால்
கவலைகள் மறைந்து விடும்

வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்
தூய்மை தான் அவள் தோற்றம் - இன்று
தேடா மானிடர் யாருளர் தரணியில்
பாடார் அவள் ஏற்றம் -- 2 

பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம்
பொலிவால் திகழ்ந்தோங்கும் - இன்று
செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை
எடுத்தே அரவணைக்கும் -- 2 

ஆண்டவர் துணையிருப்பார் | Aandavar Thunaiyiruppar

ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது
மதில்போல் சூழ்ந்திருப்பார் துன்பங்கள் நெருங்காது
கலங்காதே மனமே கலங்காதே மனமே
அன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமே

உன்னைக் காப்பவர் அயர்வதில்லை
உன்கால் இடற விடுவதில்லை
உன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லை
உன்னோடு உயிராய் இணைந்திருப்பார் --2

பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதே
புயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால்
தீமை செய்யாது திகையாதே
கண்ணான தேவன் எந்நாளும் காப்பார்
கவலையோ கலக்கமோ இனி வேண்டாம்   -ஆண்டவர் துணை

வானத்துப் பறவையை காக்கின்றவர்
வறுமையில் உன்னை விடுவாரோ
வயல்வெளி மலரை மகிழ்விப்பவர்
நோயினில் விடுதலை தருவாரே --2

உலகம் ஆயிரம் பேசினாலும் சோர்ந்து வீழ்ந்து போகாதே
தீங்கு செய்வோர் சூழ்ந்து கொண்டால் வாடி வதங்கி போகாதே
இஸ்ராயேல் இறைவன் மாறாத தேவன்
இன்றும் என்றும் உடனிருப்பார்   -ஆண்டவர் துணை


கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே | Kalangarai Theebamae

கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே
துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே
காத்திடுவாய்த் தாயே --2

மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே
மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்

தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என் உள்ளம் தாயுனைத்தேடி கூவிடும் குரல் கேளாய்

விடியலைத் தேடும் நெஞ்சங்களே | Vidiyalai Thedum Nenjankalae

விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியாக் கனவின் சொந்தங்களே --2
நமக்கொரு தாய் இருக்கின்றாள்
வாருங்கள் அவளிடம் செல்வோம் --2

இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்
கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் --2
தாயவள் அழகு பொற்சித்திரம்
கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் --2

புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்
மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் --2
வாழ்வினில் என்றும் போராட்டமே
தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே

என் ஆன்மா எந்நாளுமே | En Aanma Ennalumae

என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது  -2

ஏழைகளை எளியவரை உயர்த்தினார்  -பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார்  -2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்  -2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார்  -2

அடிமைகளை அன்புடனே நோக்கினார் -அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார்  -2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார்  -2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார்  -2


அன்னை மாமரி எங்கள் அன்பின் | Annai Mamari Engal Anbin

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)

எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2)

நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய்மரியே எம்மை
அரவணைத்துக் காப்பாய் நீயே-2

அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்
அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே -2
                                                           - நன்றிப் பூக்கள்

அன்னை மரியாம் மாதாவுக்கு | Annai Mariyaam Mathavukku

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்
நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2
ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2
காத்திடும் எங்கள்    -அன்னை மரியாம்

அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2
அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே -2
காத்திடும் எங்கள்     -அன்னை மரியாம்

துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ
தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே -2
காத்திடும் எங்கள்    -அன்னை மரியாம்

அழகின் முழுமையே தாயே | Azhakin Mulumaiyae Thayae

அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே

இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2
அருளே நிறைந்த மாமரியே
அருள் வழி காட்டிடுவாயே

அன்பும் அறமும் செய்வோம் அன்னை உனைப் பின் செல்வோம் -2
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்

அம்மா அன்பின் சிகரம் நீ | Amma Anbin Sikaram Nee

அம்மா அன்பின் சிகரம் நீ
அருளைப் பொழியும் முகிலும் நீ
அம்மா அழகின் முழுமை நீ
அம்மா என்றதும் கனிபவள் நீ
அம்மா அன்பின் சிகரம் நீ

மாசுடன் பிறந்த மனுக்குலத்தில்
மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ  -2
இயேசுவை அணைத்த கரங்களினால்
சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே

புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார்
பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ  -2
மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும்
மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ

இதயம் மகிழுதம்மா | Ithayam Makizhuthamma




இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா

தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா...!

வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா...!


Sunday, 21 April 2013

நீ செய்த நன்மை நினைக்கின்றேன் | Nee Seitha Nanmai Ninaikintren

நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
இறைவா இறைவா இறைவா இறைவா

உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் - ஒரு
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்

மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - உடன்
உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்
களைகளை அகற்றிக் காத்து வந்தாய்

சகாயத்தாயின் சித்திரம் நோக்கு | Sahaya Thayin Sitthiram Nokku

சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு
வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு

குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு - 2
தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை
சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ - 2

அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் - 2
இம்மாநிலத்தில் இவள் போல் - 2
இரங்கும் தாயும் உளரோ - 2

குறையாத அன்பு கடல் போல வந்து | Kuraiyatha Anbu Kadal Pola Vanthu

குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே - அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே - 2
 
கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் - 2
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ.... நான் - 2
 
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே - 2
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே - 2
 
இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் - 2
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ... நான் - 2

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே | Annaiyae Thayae Arokiya Mathavae

அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்
உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா
திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா - 2
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா

தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி - 2
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி - 2
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா - 2
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா - 2

ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே - 2 - அம்மா
அருள்மழை பொழிந்திடத் தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி - 2
வேளைமாநகர் வாழ் மரியே வாழி - 2

லேசான காரியம் | Laesana Kariyam

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் -2

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் -2
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் -2
உமக்கு அது லேசான காரியம்  - பெலன் உள்ளவன்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெறச் செய்வது லேசான காரியம் -2
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் -2
உமக்கு அது லேசான காரியம்    - பெலன் உள்ளவன்

இடறிய மீனவனை சீடனாய் மாற்றுவது லேசான காரியம்-2
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் -2
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் -2

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் | Ovvoru Pakirvum Punitha Viyalanam


ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!
அந்த இயேசுவை உணவாய் உண்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் --2

இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே --2
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே --2
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் --2
நாளைய உலகின் விடியலாகவே !

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே --2
இதை உணர்வோம்  நம்மை பகிர்வோம் --2
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !

இயேசுவே உன்னைக் காணாமல் | Yesuve Unnai Kanamal


இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது

கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது
உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது
ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது
உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது
உள்ளம் அடங்காது         - இயேசுவே உன்னை

உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது
தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது
கரங்களைப் பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது
சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது
ஆறுதல் எனக்கேது        - இயேசுவே உன்னை

Saturday, 20 April 2013

ஆரோக்கியத் தாயே அம்மா | Arokkiya Thayae Amma


ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா உந்தன்
அருட்பதம் நாடி வந்தேன்
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய் -2

சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே -2
உன்னைத்தான் நம்பித்தான் உலகதை உனக்களித்தான்
தேவன் வியந்தான், மகிழ்ந்தான் உன் பெருமை எண்ணித்தான்
-ஆரோக்கியத் தாயே

உள்ளம் முழுதும் நீ தந்தாயே தேவனுக்கு
வெள்ளம்போலே அருள் தந்தாளும் தாரகையே -2
எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நினைவாய் என் வாழ்வில் வருவாய்   -ஆரோக்கியத் தாயே



நீயே நிரந்தரம் | Neeye Nirantharam

நீயே நிரந்தரம்... இயேசுவே ஏன் வாழ்வில் நீயே நிரந்தரம்..
அம்மை அப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் (2)
நான் மாண்ட பின்னும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்.
நிரந்தரம்  நிரந்தரம்  நீயே நிரந்தரம் (2)

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் (2)
நிரந்தரம்  நிரந்தரம்  நீயே நிரந்தரம்  (2)

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் (2)
நிரந்தரம்  நிரந்தரம்  நீயே நிரந்தரம்  (2)

Thursday, 11 April 2013

இடைவிடா சகாயமாதா | Idaivida Sahaya Matha



இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே - 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை 
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2 
மாறாத கொடுமை நீங்காத வறுமை 
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி 
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2 
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட 
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

கோடி விண்மீன் வானத்திலே | Kodi Vinmeen Vanathilae

கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த - 2
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா - 2
உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி - 2

பொன்மாலை நேரம் | Ponmalai Neram

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்ப மேகம் கலைந்தோடுதே
உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்.

நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் -2
காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே
என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே

ஒரு கணம் என் அருகினில் அமரும்போது ஒருயுகம்
உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புது யுகம் -2
முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப்பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னை சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் நின்ற இதயம் உன் அன்பை பாடுதே

நீ ஒளியாகும் என் பாதைக்கு | Nee Oliyagum En Pathaikku

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே
இறைவனும் நீயே

நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம்விலகும் - உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையாய் சாய்வதில்லை
என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய்   (2) -நீ ஒளியாகும்

விடியலைத் தேடிடும் விழிகளிலே புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால்நினைந்தூட்டும் தாயும் என்
பால்வழி பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ
என் மீட்பரும் நேசரும் நீயாகும்   (2) -நீ ஒளியாகும்

என் உயிரான இயேசு | En Uyirana Yesu

என் உயிரான உயிரான உயிரான இயேசு (2)
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் (2)

உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதைய்யா (2)
உம் நாமம் துதிக்கையிலே இயேசைய்யா
உம் அன்பை ருசிக்கையிலே (2)– என் உயிரான

உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும் (2)
இரவும் பகலுமைய்யா!
உம் வசனம் தியானிக்கிறேன் (2) – என் உயிரான

உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே (2)
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே (2) – என் உயிரான

அடைக்கலப் பாறையான இயேசுவே | Adaikala Paraiyana Yesuvae

அடைக்கலப் பாறையான இயேசுவே
அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)
நீரே எனது வலிமை நீரே எனது பெருமை
நீரே எனது வாழ்வு இயேசையா (2)

தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)
பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)
எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல

போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)       
உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2)
என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல

Tuesday, 9 April 2013

தியானப் பாடல்கள்

Tamil Christian Song Lyrics | தமிழ் கிறிஸ்தப் பாடல் வரிகள்

  1. உன் புகழைப் பாடுவது | Un Pugazhai Paduvathu
  2. ஒரு போதும் உனைபிரியா | Orupothum Unaipiriya Nilaiyana
  3. நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே | Nee Enthan Paarai
  4. நீயே எனது ஒளி | Neeyae Enathu Oli
  5. உம் சிறகுகள் நிழலில் | Um sirakukal Nizhalil
  6. இயேசுவே உந்தன் வார்த்தையால் | Yesuvae Unthan Varthaiyaal
  7. யாரிடம் செல்வோம் இறைவா | Yaridam Selvom Iraivaa
  8. என் இயேசுவே உன்னை நான் | En Yesuvae Unai Naan
  9. நெஞ்சத்திலே தூய்மையுண்டோ | Nenjathilae Thooimaiundo 
  10. அடைக்கலப் பாறையான இயேசுவே | Adaikala Paraiyana Yesuvae 
  11. என் உயிரான இயேசு | En Uyirana Yesu 
  12. நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் | Nee Oliyagum En Pathaikku 
  13. பொன்மாலை நேரம் | Ponmalai Neram  
  14. இயேசுவே உன்னைக் காணாமல் | Yesuve Unnai Kanamal 
  15. நீயே நிரந்தரம் | Neeye Nirantharam  
  16. லேசான காரியம் | Laesana Kariyam  
  17. குறையாத அன்பு கடல் போல வந்து | Kuraiyatha Anbu Kadal Pola Vanthu 
  18. நீ செய்த நன்மை நினைக்கின்றேன் | Nee Seitha Nanmai Ninaikintren
  19. உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு | Ummai Allamal Enakku Yaar Undu  
  20. தொடும் என் கண்களையே | Thodum En Kankalaiyae  
  21. நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு | Nilaiyilla Ulagu Nijamilla Uravu  
  22. இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான் | Yesu Yesu Yesu Entru Solla Asaithan  
  23. இயேசு நாமம் பாடப்பாட‌ | Yesu Namam Padapada  
  24. வாழ்வை அளிக்கும் வல்லவா | Vazhvai Alikkum Vallava  
  25. நீர் எனக்கு போதும் | Nee Enakku Pothum  
  26. இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா | Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva  
  27. ஆனந்த மழையில் நானிலம் மகிழ | Ananda Mazhaiyil Nanilam Mahizha  
  28. அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு | Anjathae Anjathae Nan Entrum Unnodu  
  29. மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை | Manbuyar Ivvarul Anumanathai  
  30. என் தேடல் நீ என் தெய்வமே | En Thedal Nee En Thaivamae  
  31. என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி | En Aayan Yesu En Ullam Thedi  
  32. எந்தன் இதய கானம் | Enthan Ithaya Ganam  
  33. உன்னில் நான் ஒன்றாக | Unnil Naan Ontraga  
  34. இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு | Iraivan Azhaikkintar Iniya Unavirku 
  35. ஆனந்த மழையில் நானிலம் மகிழ | Ananda Mazhaiyil Nanilam Mahizha  
  36. அன்பே என்றானவா | Anbae Entranava  
  37. அமைதி தேடி அலையும் நெஞ்சமே | Amaithi Thaedi Alaiyum Nenjamae  
  38. அமைதியின் தெய்வமே இறைவா | Amaithiyin Thaivamae Iraiva  
  39. அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு | Anjathae Naan Entrum Unnodu  
  40. என்னுயிரே கலக்கம் கொள்ளாதே | Ennuyirae Kalakkam Kollathae  
  41. உன்னை நம்பி வாழும் போது | Unnai Nambi Vazhum Pothu  
  42. கருணை உன் வடிவல்லவா | Karunai Un Vadivallava  
  43. என் உள்ளம் கவியொன்று பாடும் | En Ullam Kavi Ontru Paadum  
  44. செம்மறியின் விருந்துக்கு | Semmariyin Virunthukku  
  45. சுமை சுமந்து சோர்ந்திருப்போரே | Sumai Sumanthu Sornthirupporae  
  46. கிறிஸ்துவின் சரீரமிது | Christhuvin Sareeramithu  
  47. ஒருதரம் ஒரே தரம் | Oru Tharam Ore Tharam  
  48. எனில் வாரும் என் இயேசுவே | Enil Varum En Yesuvae  
  49. நானே வானின்று இறங்கி வந்த | Naanae Vaaninintru Irangi Vantha  
  50. நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம் | Nee illatha Ullam Oor Palaivanam  
  51. வாழ்வது நானல்ல | Vazhvathu Naanalla  
  52. என்னோடு நீ பேச வந்தாய் | Ennodu Nee Paesa Vanthai  
  53. என் சுவாசக் காற்றே | En Suvasa Katre  
  54. எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் | Enthan Jebavelai Umaithedi Vanthaen 
  55. நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் | Nilavum Thoongum Malarum Thoongum  
  56. என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே | Ennoda Yesuvae Konja Neram Pesumae  
  57. என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு | En Vazhvin Aadharam  
  58. என் இயேசுவே என் ஆண்டவரே | En Yesuvae En Aandavarae  
  59. உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் | Unnai Thedum Enthan Ullam  
  60. இரக்கம் நிறைந்த தெய்வமே | Irakkam Niraintha Thaivamae  
  61. அன்பின் தேவ நற்கருணையிலே | Anbin Theva Narkarunaiyilae  
  62. கலைமான்கள் நீரோடை தேடும் | Kalaimaangal Neerodai Thaedum  
  63. எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய | Ellam Umakkaka Yesuvin Thivya  
  64. என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு | Ennidam Ezhuntha Yesuvae Umakku  
  65. நானே வானினின்று இறங்கி வந்த | Naanae Vaaninintru Irangi Vantha  
  66. என் தெய்வம் வாழும் பூமியிது | En Thaivam Vazhum Poomiyithu  
  67. பார்வை பெற வேண்டும் | Paarvai Pera Vaendum  
  68. அதிசங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar  
  69. இறைவன் என்னை காக்கின்றார் | Iraivan Ennai Kakkintar  
  70. இறைவா நீ ஒரு சங்கீதம் | Iraiva Nee Oru Sangeetham  
  71. இசை ஒன்று இசைக்கின்றேன் | Isai Ontru Isaikkintren  
  72. ஆண்டவரை நான் போற்றிடுவேன் | Aandavarai Naan Pottriduven  
  73. ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே | Aandavarae En Attralai Ullavarae  
  74. நெஞ்சே நெஞ்சே இறைவனை | Nenjae Nenjae Iraivanai  
  75. ஆண்டவர் துணையிருப்பார் | Aandavar Thunaiyiruppar  

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ | Nenjathilae Thooimaiundo

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!
இயேசு வருகின்றார்.!
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்.!

வருந்தி சுமக்கும் பாவம் - உன்னை
கொடிய இருளில் சேர்க்கும் -2
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் -2

குருதி சிந்தும் நெஞ்சம் - உன்னை
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
செய்த பாவம் இனி போதும்
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

மாய லோக வாழ்வு - உன்னில்
கோடி இன்பம் காட்டும் - 2
என்னில் வாழும் அன்பர் இயேசு
உன்னில் வாழ இடம் வேண்டும் - 2

என் இயேசுவே உன்னை நான் | En Yesuvae Unai Naan

என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்.!
எந்நாளும் உன் அருளை நான்
பாடி மகிழ்ந்திருப்பேன்
என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்!

உன் நாமம்  என் வாயில்
நல் தேனாய் இனிக்கின்றது 
உன் வாழ்வு என் நெஞ்சில் - நல்
செய்தியாய் ஜொலிக்கிறது
உன் அன்பை நாளும் எண்ணும் போது
ஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே

உன் நெஞ்சின் கனவுகளை
நிறைவேற்ற நான் உழைப்பேன்
உறவாகும் பாலங்களை
உலகெங்கும் நான் அமைப்பேன்
இறையாட்சி மலரும் காலம் வரையில்
இனிதாய் எனை அளிப்பேன்  -என் இயேசுவே

யாரிடம் செல்வோம் இறைவா | Yaridam Selvom Iraivaa


யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா    (4)

அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும்    (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ  (2)
ஆதரித்தே அரவணைப்பாய்    (2)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதையா  (2)
குணமதிலே மாறாட்டம்  (2)
குவலயந்தான் இணைவதெப்போ   (2)

வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல்   (2)
உலகிருக்கும் நிலை கண்டு      (2)
உனது மனம் இரங்காதோ       (2)

இயேசுவே உந்தன் வார்த்தையால் | Yesuvae Unthan Varthaiyaal

இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில்
கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என்
உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே

தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலங்களும் இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் அன்பின் மேன்மையும்
பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுமே.

நன்மையில் இனி நிலைபெறும் என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலைவருமே
இன்றெழும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுதே
இயேசுவே என் தெய்வமே உன்
வார்த்தை ஒளிர்ந்திடுதே