Pages

Wednesday, 24 April 2013

அம்மா நீ தந்த ஜெபமாலை | Amma Nee Thantha Jebamalai

அம்மா நீ தந்த ஜெபமாலை
ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்

சந்தோஷ தேவ இரகசியத்தில்
தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய்
எம் தோஷம் தீர இயேசுபிரான்
உம் அன்பு மகனானார் அவரை
காணிக்கை வேண்டி புலம்பியதும்
வீணாகவில்லை தாய்மரியே
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

துயர்நிறை தேவ இரகசியத்தில்
தூயவரின் வியாகுலங்கள் கண்டோம்
உயர் வாழ்விழந்த எமக்காக
உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை
சாட்டைகளும் கூர் முள்முடியும்
வாட்டிய சிலுவைப்பாடுகளும்
சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா
தாய் நெஞ்சம் நொறுங்கியதார் அறிவார்

மகிமையின் தேவ இரகசியத்தில்
மாதா உன் மாண்பினைக் கண்டோம்
சாகாமை கொண்ட நின் மகனார்
சாவினை வென்றெழுந்தார் அவரே
தூயாவியால் உன்னை நிரப்பியதும்
தாயுன்னை வானுக்கு எழுப்பியதும்
மூவுலகரசி ஆக்கியதும்
மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே 


2 comments:

  1. Please correct the following error:
    Replace the line "காணிக்கை வேண்டி புலம்பியதும்"
    with the following lines (separated by comma) "காணிக்கை தந்து கலங்கியதும், காணாமல் தேடி புலம்பியதும்"

    ReplyDelete
  2. Also please correct the following additional ones:
    1. "தூயவரின் வியாகுலங்கள் கண்டோம்" should be "தூய நின் வியாகுலங்கள் கண்டோம்"
    2. "மாதா உன் மாண்பினைக் கண்டோம்" should be "மாதா உன் மாண்பினைக் கண்டோமே"
    3. "தூயாவியால் உன்னை நிரப்பியதும்" should be "ஆவியால் உன்னை நிரப்பியதும்"

    ReplyDelete