Pages

Sunday, 28 April 2013

என் தெய்வம் வாழும் பூமியிது | En Thaivam Vazhum Poomiyithu

என் தெய்வம் வாழும் பூமியிது
எத்துணை அழகு இது
உலகே கண்கள் திறவாயோ
உவகை இன்று காணாயோ

பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்
உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர்மனம் கூறும்
எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்
பொங்கிடும் நீரின் ஊற்றும்
மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்
மின்னலும் தன்னொளி நிலவும்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு --2
இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப்பருகு - என் தெய்வம்

நிறைந்த அன்புடை நெஞ்சம் நிலவென ஒளிதரும் அறிவும்
மலர்ந்த முகந்தனின் அழகும் மங்கா கலைகளின் வளமும்
என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்
எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்
நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குணங்கள்
நிம்மதி தேடிடும் மனங்கள்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு --2
எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப்பருகு - என் தெய்வம்

No comments:

Post a Comment