Pages

Sunday, 28 April 2013

நெஞ்சே நெஞ்சே இறைவனை | Nenjae Nenjae Iraivanai

நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு
தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு
வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார்
எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசைப் பாடிடு

நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும்
கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும்
கடலையே பிரித்துக் கடந்திட உதவினார்
கலகம் புரிந்தோரை கலங்கிடச் செய்தார்
நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே
ஊற்றழகும் உயிரழகும் இறைவனின் மாட்சியே
வாழ்வெனும் பாதையில் வீழும் வேளையில்
தாங்கிடும் தாயாய் தனைத் தந்தார்
நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

No comments:

Post a Comment