Pages

Sunday, 28 April 2013

என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு | Ennidam Ezhuntha Yesuvae Umakku

என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
அன்பு ஆராதனை நன்றியுமென்றும் - 2

பரலோக வாசிகள் அருமையாய் உம்மை
புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த - 2
நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ
நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ

மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து
நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென - 2
ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு
பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்
சீரிய திருவுள்ளம் பிறழாது வளர - 2
இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க
நேசமாய் அருள வேண்டுகின்றோமே

3 comments:

  1. One more stanza:

    ஆசிரருளும் என் தாய், தந்,தை, சோதரர்,
    சோதரி, நண்பர் சுற்றம் எல்லோர்கும் - 2
    பேருதவி செய்தோர், பகைமையில் உழல்வோர்,
    பாவிகள், மரித்தோர், திருச்சபையோர்கும்

    ReplyDelete
  2. Corrected stanza:

    ஆசிரருளும் என் தாய், தந்தை, சோதரர்,
    சோதரி, நண்பர், சுற்றம் எல்லோர்கும் - 2
    பேருதவி செய்தோர், பகைமையில் உழல்வோர்,
    பாவிகள், மரித்தோர், திருச்சபையோர்கும்

    ReplyDelete