Pages

Tuesday, 9 April 2013

உன் புகழைப் பாடுவது | Un Pugazhai Paduvathu


உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமைய்யா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்வின் செல்வமைய்யா
     
துன்பத்திலும் இன்பத்திலும் நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல்
அன்னையாய் அருகிருப்பாய்  (2)
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (2)       - உன் புகழை

பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
என்னையும் ஏன் அழைத்தாய்  (2)
அன்பினுக்கு அடைக்கும் தாழ்
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்  (2)     -உன் புகழை

1 comment: