Pages

Tuesday, 9 April 2013

ஒரு போதும் உனைப்பிரியா | Orupothum Unaipiriya Nilaiyana


Listen Audio


ஒரு போதும் உனைப்பிரியா நிலையான
உறவொன்று வேண்டும்.
என் உடல் கூட எரிந்தாலும் உன் நாமம்
நான் சொல்ல வேண்டும்.
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நிழலாக வா இறைவா.

உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்
ஏன் என்னை நீ தெரிந்தாய்.
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய் - உன்
மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்.       -ஒரு போதும்

நீர் தோடும் மான்போல தேடி வந்தேன்.
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்
என் உள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என் உள்ளம் நின்றாய் - நிதம்
என்பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்.       -ஒரு போதும்

No comments:

Post a Comment