|
போப் பிரான்ஸிஸ் 1936ல் அர்ஜெண்டினாவின் தலைநகர் போனஸ் அயர்ஸில் , பிறந்தார். அவரது இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கொக்லியோ. இளைஞராக இருந்த போது அவர் ஜெசூவிட்கள் அமைப்பில் சேர்ந்து குருகுலம் குறித்த பாடங்களை படித்தார். பின்னர் 1969ல் அவர் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். மதகுருமார்கள் பதவி வரிசையில் படிப்படியாக உயர்ந்த அவர் ,1992ம் ஆண்டு போனஸ் அயர்ஸின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் பேராயராக உயர்ந்தார். பின்னர் 2001ல் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இவரை கர்தினாலாக உயர்த்தினார். |
|
2013ம் ஆண்டு, மார்ச் 13, புதன் இரவு 8.12 மணிக்கு திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார் இயேசு சபை கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கொக்லியோ. இவர் தனது பெயராக பிரான்சிஸ் என தேர்வு செய்துள்ளார். |
Pages
▼
No comments:
Post a Comment