Pages

Sunday, 26 May 2013

தொடும் என் கண்களையே | Thodum En Kankalaiyae

தொடும் என் கண்களையே | Thodum En Kankalaiyae 

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே -2

தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே


தொடும் என் நாவினையே உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே


தொடும் என் கைகளையே உம் பணி செய்ய வேண்டுமே
இயேசுவே உம் பணியைச் செய்ய வேண்டுமே

தொடும் என் மனதினையே மனப் புண்கள் ஆற வேண்டுமே
இயேசுவே மனப் புண்கள் ஆற வேண்டுமே


தொடும் என் உடலினையே உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே

தொடும் என் ஆன்மாவையே என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே

தொடும் என் இதயத்தையே உம் அன்பு பெருக வேண்டுமே
இயேசுவே உம் அன்பு பெருக வேண்டுமே



No comments:

Post a Comment