Pages

Wednesday, 15 May 2013

புனித அந்தோணியார் பாடல்கள் | St Anthony's Songs in Tamil



1. அன்புத் தந்தையே கருணை தெய்வமே | Anbu Thanthaiyae Karunai Thaivamae
 
அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே
புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க - 2
வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க

பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால்
தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் - 2
தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய்
உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே

இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே
இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே - 2
எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல
இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2.மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார| Mannulagil Intru Thevan Irangi Varugirar

விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும்
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும்
ஞானஜோதியே உயர்வான ஜோதியே
தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்

மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்

அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்  -மண்ணுலகில்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


No comments:

Post a Comment