Pages

Saturday, 11 May 2013

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா | Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா   --2

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு - இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ --2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா  --2

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ  --2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா  --2


2 comments: