Pages

Tuesday, 9 April 2013

மாமறை புகழும் மரியென்னும் மலரே | Mamarai Pukazhum Mariyennum Malarae

மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மா மணியே (2)

அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த ஆரணங்கே (2)
உருவிலா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே!

பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)
இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி
வானக வாழ்வை அளிப்பாயே!

3 comments: