Church in Shoreline Connecticut,USA
Pages
▼
Friday, 5 October 2012
Wednesday, 12 September 2012
St. Rajakanni Matha Church, Kadakulam | புனித ராஜகன்னி மாதா ஆலயம், கடகுளம்
புனித ராஜகன்னி மாதா ஆலயம்:
கடகுளம், புனித ராஜகன்னி மாதா ஆலயமானது தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள பங்கு ஆலயங்களில் ஒன்றாகும். கடகுளம் தூத்துக்குடிக்கு மேற்கே 70 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலிக்கு தெற்கே 70 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரிக்கு கிழக்கே 59 கி.மீ தொலைவிலும் மேலும் திசையன்விளையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- புனித ராஜகன்னி மாதாவின் ஆலயம் சுமார் 1650-ல் ஒரு சிறிய ஆலயமாகக் கட்டப்பட்டது.
- தற்போதுள்ள பெரிய ஆலயம் 1880-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1927-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட்டது.
- 1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. ரோச் அவர்கள் ஆலயத்தை அர்ச்சித்து திறந்துவைத்தார்.
- ஆரம்ப காலங்களில் இவ்வாலயமானது அருகிலுள்ள பங்குகளான கூடுதாழை, கூட்டப்பனை, சொக்கன்குடியிருப்பு மற்றும் திசையன்விளை ஆகிய பங்குகளில் கிளைப் பங்காக இணைந்திருந்தது.
- 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டது.
- அருட்தந்தை. பர்னபாஸ் அவர்கள் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றினார்.
பங்குத்தந்தை: அருட்தந்தை. அன்புச் செல்வன்
மறை மாவட்ட ஆயர் : மேதகு ஆயர். Dr. A. ஸ்டீபன் அவர்கள்
சிற்றாலயங்கள்:
- புனித அந்தோணியார் சிற்றாலயம்
- புனித சவேரியார் சிற்றாலயம்
- புனித ராஜகன்னி மாதா சிற்றாலயம்
மண்ணின் மைந்தர் குருக்கள்:
மண்ணின் அருட்சகோதரிகள்:
- அருட்தந்தை J. எட்வர்ட் .
- அருட்தந்தை R. அமல்ராஜ் .
- அருட்தந்தை A. நெல்சன்ராஜ் .
- அருட்தந்தை ஞான பெப்பின் .
- அருட்தந்தை G. செல்வராயர் .
- அருட்தந்தை R. இருதயராஜ் .
- அருட்தந்தை ஸ்டீபன் ஜாண்சன் .
மண்ணின் அருட்சகோதரிகள்:
- அருட்சகோதரி ஹெலன்
- அருட்சகோதரி ஜெயராணி
- அருட்சகோதரி ஞான்சி
திருப்பலி நேரங்கள்:
வார வழிபாட்டு நிகழ்வுகள்:
ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள்:
கிளைப் பங்கு:
புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்.
வார வழிபாட்டு நிகழ்வுகள்:
- தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
- மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.00 மணி வரை புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
- மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை புனித சவேரியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
- மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.00 மணி வரை புனித ராஜகன்னி மாதா சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள்:
- ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6.45 மணி முதல் 8.00 மணி வரை திருப்பலி நடைபெறும்.
கிளைப் பங்கு:
புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்.
புனித ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா:
- ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
- ஒவ்வொரு நாளும் காலை திருப்பலியும், மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது.
- நவ நாட்களில் ஒவ்வொரு நாளையும் ஊரின் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், திரு இருதய சபையினர், மரியாயின் சேனை சபையினர், திருக்குடும்பச் சபையினர், புனித அந்தோணியார் இளைஞர் சபையினர், புனித அமலோற்பவ அன்னை சபையினர், பாலர் சபையினர் மற்றும் வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் ஆகியோர் சிறப்பிக்கின்றனர்.
- ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழா நாட்களில் புனித ராஜகன்னி அன்னையின் திருத்தேர் ஊரைச் சுற்றிலும் பவனி வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
- திருவிழா நிறைவுற்ற மறுநாள் மதியம் ஊர் பொது அசனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பாக ஊர் பொது அசனம் நடைபெறும்.
திருவிழா
நிகழ்வுகள்:
1-ம் திருவிழா :
1-ம் திருவிழா :
காலை கொடியேற்றத்துடன் தொடங்கி திருப்பலி மற்றும்
மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.
2-ம் திருவிழா முதல் 7-ம் திருவிழா
வரை தினமும் காலையில் திருப்பலியும்
மாலையில் மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளையும் ஊரின்
ஒவ்வொரு சபையினர் சிறப்பிக்கின்றனர்.
8-ம் திருவிழா:
காலை திருப்பலி மற்றும் மாலை நற்கருணைப்
பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன்
கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.
9-ம்திருவிழா:
காலை திருப்பலி மற்றும் மாலை அன்னையின்
திருத்தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன்
கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.
10-ம் திருவிழா:
காலை திருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெறும். திருப்பலியில் ஊர் சிறுவர்களுக்கு புது
நன்மை கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு
திருமுழுக்கு கொடுத்தல் நடைபெறும். மேலும் பல்வேறு விளையாட்டுப்
போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாலையில் அன்னையின் திருத்தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை
ஆராதனையும் நடைபெறுகின்றது.
11-ம் நாள்:
ஊர் நிர்வாகிகள் சார்பில் மதியம் ஊர் பொது
அசனம் நடைபெறுகின்றது.
12-ம் நாள்:
புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம்
மக்கள் சார்பாக ஊர் பொது
அசனம் நடைபெறுகின்றது.
அருட்தந்தை. அன்புச் செல்வன் அவர்கள்
பங்குத் தந்தை,
புனித ராஜகன்னி மாதா ஆலயம்,
கடகுளம் -628656,
தூத்துக்குடி மாவட்டம்.
தொலை பேசி எண்: 04639 255335
படங்கள் :